விழுப்புரம் : விழுப்புரத்தில் அ.தி.மு.க., நகர எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில் முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு நாளையொட்டி, ஏழை மக்களுக்கு சேலை வழங்கப்பட்டது.
விழுப்புரம் காந்தி சிலையருகே, அ.தி.மு.க., நகர எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில் முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.நகர எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் குமரன் தலைமை தாங்கினார்.நியூஸ் ஜெ., நிர்வாக இயக்குனர் ராதாகிருஷ்ணன், ஜெ., உருவபடத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தி, அன்னதானம் மற்றும் 200 ஏழை பெண்களுக்கு சேலை வழங்கினார்.மாவட்ட ஜெ., பேரவை தலைவர் ராமதாஸ், மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல், மாவட்ட இளைஞரணி செயலாளர் பசுபதி, நகர செயலாளர் பாஸ்கரன், நகர பாசறை செயலாளர் கிருஷ்ணன், நகர மாணவரணி செயலாளர் அன்பரசன், இலக்கிய அணி செயலாளர் கலை, நகர பேரவை செயலாளர் வரதன், மாவட்ட ஜெ., பேரவை இணை செயலாளர் அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE