அரசியல் செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளை ஏமாற்றுகிறாரா ஸ்டாலின்?

Added : டிச 06, 2020
Share
Advertisement
சென்னை: தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் அளித்த அம்சங்கள், மத்திய அரசு வேளாண் சட்ட மசோதாவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது. ஆனால், வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு எனக்கூறி, தி.மு.க., விவசாயிகளை ஏமாற்றுவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.கடந்த, 2016ல் நடந்த சட்டசபை தேர்தலை ஒட்டி, தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 23ம் பக்கத்தில், கூறியிருப்பதாவது:வேளாண்

சென்னை: தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் அளித்த அம்சங்கள், மத்திய அரசு வேளாண் சட்ட மசோதாவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது.

ஆனால், வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு எனக்கூறி, தி.மு.க., விவசாயிகளை ஏமாற்றுவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.கடந்த, 2016ல் நடந்த சட்டசபை தேர்தலை ஒட்டி, தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 23ம் பக்கத்தில், கூறியிருப்பதாவது:வேளாண் பொருட்களை சந்தைப்படுத்த புதிய கொள்கை உருவாக்கப்படும். இதன் அடிப்படையில், தமிழக வேளாண் உற்பத்திப் பொருட்களை, இந்திய மற்றும் சர்வதேச அளவில் சந்தைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.விவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருட்களை, இடைத்தரகர்கள் இன்றி, சந்தை விலைக்கு ஏற்ப விற்பனை செய்து பயன்பெற வேண்டும். இதற்கு உதவும் வகையில், உற்பத்தியாளரையும், வாங்குவபரையும் இணைக்க, அரசும், உற்பத்தியாளர்களும் இணைந்து நிர்வகிக்கும், வேளாண் விளைபொருள் பரிவர்த்தனை அமைப்பு உருவாக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

முரண்பாடு

மத்திய வேளாண் சட்டங்களிலும், இந்த கருத்துக்கள் தான் முக்கியமாக இடம் பெற்றுள்ளன. அப்படி என்றால், தி.மு.க.,வின் விருப்பத்தை, கோரிக்கையை தான், மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. ஆனால், மத்திய அரசுக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும், தி.மு.க., கறுப்புக் கொடி போராட்டம் நடத்தியதும், தேசிய அளவில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு தி.மு.க., ஆதரவு அளிப்பதும் முரண்பாடாக உள்ளது.தி.மு.க.,வின் இந்த முரண்பாடு குறித்த விபரங்கள், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதை அறிந்த விவசாயிகள், தங்களை தி.மு.க., ஏமாற்றி, மத்திய அரசுக்கு எதிராக திரும்ப வைக்கிறதா என, சந்தேகத்தை எழுப்பி உள்ளனர்.சரத்பவாருக்கும் சிக்கல்மத்திய வேளாண்துறை அமைச்சராக இருந்த, தேசியவாத காங்., தலைவர் சரத்பவார், 2010 ஆகஸ்டில், டில்லி முதல்வராக இருந்த, ஷீலா தீட்சித்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், வேளாண் பொருட் களை சந்தைப்படுத்த புதிய கொள்கை ஏற்படுத்த வேண்டும்; இடைத்தரகர்கள் இன்றி விளைபொருட்களை, விவசாயிகள் விற்பனை செய்ய, வழி வகை செய்ய வேண்டும் என, வலியுறுத்தி உள்ளார்.தற்போது, அதே கோரிக்கையை வேளாண் சட்டங்கள் வாயிலாக நிறைவேற்றியுள்ள மத்திய அரசுக்கு, எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இது, பா.ஜ., அரசு எதைச் செய்தாலும், குறை கூற வேண்டும் என்ற, எதிர்கட்சிகளின் நிலைப்பாட்டை காட்டுவதாக, விவசாயிகள் சங்கத்தினர் பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.

கார்த்தி - காயத்ரி மோதல் தொடருது

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ஆதரித்தும், அச்சட்டங்களால் விவசாயிகள் பெறப்போகும் ஆதாயங்களையும் சுட்டிக்காட்டி, நடிகையும், தமிழக பா.ஜ., செயற்குழு உறுப்பினருமான காயத்ரி ரகுராம், தன் 'டுவிட்டர்' பக்கத்தில், சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அவருக்கு பதிலடி தரும் வகையில், நடிகர் சிவகுமாரின் மகன் கார்த்தி, தன் டுவிட்டர் பக்கத்தில், 'போராடும் விவசாயிகளின் குரலுக்கு செவி சாய்த்து, அவர்கள் கோரிக்கை களைப் பரிசீலித்து, விவசாயிகள் சுதந்திரமாக தொழில் செய்வதை, மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்' எனக் கூறியுள்ளார். இதற்கு, காயத்ரி ரகுராம், 'வேளாண் சட்டங்கள் தொடர்பாக, என்னுடன் விவாதிக்க தயாரா...' எனக் கேள்வி எழுப்பினார்.

இவர்கள் இருவரும், மாறி மாறி சமூக வலை தளங்களில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து, மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றனர். பருத்தி வீரன் படத்தில் கார்த்தி நடித்ததிலிருந்து, அவர் தன்னை பருத்தி விவசாயி என, நினைத்து வாழ்ந்து வருகிறார். 'அமெரிக்கா சென்று படித்ததெல்லாம், அவர் கெட்டக் கனவாக மறந்து விட்டார்' என, காயத்ரி ரகுராமுக்கு ஆதரவான பதிவும், சமூக வலைதளங்களில் இடம் பெற்றுஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X