பொது செய்தி

தமிழ்நாடு

இரண்டாம் நிலை காவலர் பணி: விழுப்புரத்தில் மாதிரி தேர்வு

Added : டிச 06, 2020
Share
Advertisement
விழுப்புரம் : இரண்டாம் நிலை காவலர் பணிக்கான மாதிரி தேர்வு விழுப்புரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடந்தது.தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 10,906 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அக்., 5ம் தேதி முதல் இணையதள பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு

விழுப்புரம் : இரண்டாம் நிலை காவலர் பணிக்கான மாதிரி தேர்வு விழுப்புரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடந்தது.

தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 10,906 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அக்., 5ம் தேதி முதல் இணையதள பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்ற நபர்களுக்கு 5 மாதிரி தேர்வுகள் நடத்த வேலைவாய்ப்பு துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.

இதற்காக, தேர்வு பயிற்சி வல்லுநர்களை கொண்டு வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு கடந்த 4ம் தேதி முதல் நாளை 8ம் தேதி வரை மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகின்றது.இதில், நேற்று நடந்த தேர்வில் 81 பேர் பங்கேற்றனர்.இன்று 7ம் தேதி மற்றும் நாளை 8ம் தேதி தேர்வுகளில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களின்ஹால்டிக்கெட்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றை 9442208674, 7010827700 ஆகிய மொபைல் எண்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்புமாறு உதவி இயக்குநர் பாலமுருகன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X