விழுப்புரம் : விழுப்புரத்தில் போதையில் தகராறில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் மருதப்பன் மற்றும் போலீசார் நேற்று ரயில் நிலையம் அருகே ரோந்து சென்றனர். அங்கு, நண்பர்களான கடலுார் மாவட்டம், வண்டிபாளையத்தை சேர்ந்த பாரதி மகன் சதீஷ்,29; சிவகங்கை மாவட்டம், கோவனுார் காலனி, உலகநாதன் மகன் சரவணகுமார்,29; இருவரும், குடிபோதையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதோடு, பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.இதையடுத்து, போலீசார் இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE