போதையில் ரகளை இருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போதையில் ரகளை இருவர் கைது

Added : டிச 06, 2020
Share
விழுப்புரம் : விழுப்புரத்தில் போதையில் தகராறில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் மருதப்பன் மற்றும் போலீசார் நேற்று ரயில் நிலையம் அருகே ரோந்து சென்றனர். அங்கு, நண்பர்களான கடலுார் மாவட்டம், வண்டிபாளையத்தை சேர்ந்த பாரதி மகன் சதீஷ்,29; சிவகங்கை மாவட்டம், கோவனுார் காலனி, உலகநாதன் மகன் சரவணகுமார்,29; இருவரும், குடிபோதையில் ஒருவரை

விழுப்புரம் : விழுப்புரத்தில் போதையில் தகராறில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் மருதப்பன் மற்றும் போலீசார் நேற்று ரயில் நிலையம் அருகே ரோந்து சென்றனர். அங்கு, நண்பர்களான கடலுார் மாவட்டம், வண்டிபாளையத்தை சேர்ந்த பாரதி மகன் சதீஷ்,29; சிவகங்கை மாவட்டம், கோவனுார் காலனி, உலகநாதன் மகன் சரவணகுமார்,29; இருவரும், குடிபோதையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதோடு, பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.இதையடுத்து, போலீசார் இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X