சென்னை: தமிழகத்தில், நேற்று, 1,320 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சையில் இருந்த, 1,398 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர்.
சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:மாநிலத்தில் உள்ள, 228 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், 70 ஆயிரத்து, 765 மாதிகள் நேற்று பரிசோதிக்கப்பட்டன. அதில், சென்னையில், 346 பேர்; கோவையில், 139 பேர்; திருப்பூரில், 72 பேர்; செங்கல்பட்டில், 66 பேர் என, மாநிலம்முழுதும், 1,320 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.மார்ச் முதல், நேற்று வரை, 1.21 கோடி பேரிடம் இருந்து, 1.24 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
அதில், ஏழு லட்சத்து, 90 ஆயிரத்து, 240 பேருக்கு, தொற்று கண்டறியப்பட்டுள்ளது.சிகிச்சையில் இருந்தோரில், சென்னையில், 413 பேர் உட்பட, நேற்று, 1,398 பேர் குணமடைந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து, இதுவரை, ஏழு லட்சத்து, 67 ஆயிரத்து, 659 பேர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். தற்போது, சென்னையில், 3,257 பேர்; கோவையில், 899 பேர்; செங்கல்பட்டில், 554 பேர் உட்பட, மொத்தம், 10 ஆயிரத்து, 788 பேர் சிகிச்சையில் உள்ளனர்.நேற்று, சென்னையில், நான்கு பேர் உட்பட, 16 பேர் இறந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து இதுவரை, 11 ஆயிரத்து, 793 பேர் இறந்து உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE