பொது செய்தி

தமிழ்நாடு

'உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களும் 'கார்ப்பரேட்' தான்'

Added : டிச 07, 2020
Share
Advertisement
மதுரை: ''விவசாயிகள் ஒன்றுகூடி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஆரம்பித்தால், அதுவும் கார்ப்பரேட் நிறுவனம் தான். இதன் மூலம் விவசாயிகள் ஒப்பந்தம் போடலாம்,'' என, பா.ஜ., விவசாய அணி மாநிலத் தலைவர் நாகராஜன், வேளாண் சட்டம் குறித்து கூறினார்.அவரது சிறப்புப் பேட்டி:வேளாண் சட்டத்தால் பாதிப்பு இல்லை என, மத்திய அரசு தெரிவித்தும், பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் நடத்துவது

மதுரை: ''விவசாயிகள் ஒன்றுகூடி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஆரம்பித்தால், அதுவும் கார்ப்பரேட் நிறுவனம் தான். இதன் மூலம் விவசாயிகள் ஒப்பந்தம் போடலாம்,'' என, பா.ஜ., விவசாய அணி மாநிலத் தலைவர் நாகராஜன், வேளாண் சட்டம் குறித்து கூறினார்.

அவரது சிறப்புப் பேட்டி:வேளாண் சட்டத்தால் பாதிப்பு இல்லை என, மத்திய அரசு தெரிவித்தும், பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் நடத்துவது ஏன்?விவசாயம் தொடர்பான மூன்று சட்டங்களைப் போன்ற தேர்தல் அறிக்கைகளை தான், 2016ல் காங்கிரஸ் உறுதி அளித்தது. சட்டம் நடைமுறைக்கு வந்தால், விவசாயிகள் செழிக்க ஆரம்பித்து விடுவர்.

இடைத்தரகர்களின் லாபம் குறைந்துவிடும் என்பதால், விவசாயிகள் போர்வையில் போராட்டம் நடத்துகின்றனர். அரசியல் பிழைப்பு போய்விடும் என எதிர்க்கட்சிகளுக்கு பயம்.ஒப்பந்தம் இட்டால் நிலம் பறிபோய்விடும் என விவசாயிகள் பயப்படுகின்றனரா?விவசாயிகள் நேரடியாக கார்ப்பரேட் நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து, விலையை நிர்ணயிக்கலாம்.மூன்றடுக்கில் உள்ளூர் அதிகாரிகள், கலெக்டர், நீதிமன்றம் என விவசாயிகளுக்கு பாதுகாப்பு உள்ளது. கரும்புக்கு இந்த சட்டம் இல்லாததால் தான், விவசாயிகள் ஏமாற்றப்படுகின்றனர்.இது இருந்தால், கார்ப்பரேட் நிறுவனங்களின் சொத்தை ஜப்தி செய்ய முடியும். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களும் கார்ப்பரேட் ஆகலாம். 300 விவசாயிகள் சேர்ந்தால், உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஆரம்பிக்கலாம்.விவசாயி சேர்மனாக, டைரக்டராக மாறலாம். விளைபொருட்களை மதிப்பு கூட்டி, 'பிராண்ட்' ஆக மாற்றலாம். பாலுக்கு இப்படி தானே செய்கின்றனர். ஏன் மற்ற பொருட்களுக்கு இப்படி செய்யக்கூடாது.

ஒப்பந்த சட்டத்தின் மூலம் விவசாயிகள் எப்படி பயன் பெறுவர்?ஏற்கனவே கரும்பு, முருங்கை, கோழிப்பண்ணை, தேங்காய்க்கு ஒப்பந்தம் போட்டுள்ளோம்.இனிமேல் போடப்படும் ஒப்பந்தத்தை, அரசாங்கம் உடனிருந்து கண்காணிக்கும். இந்த முறையில் தான் குஜராத் விவசாயிக்கு கிடைக்க வேண்டிய தொகை உடனடியாக கிடைத்தது.விவசாயிகளுக்கு மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்கள் என்ன?உழவர் உற்பத்தி நிறுவனங்கள் மூலம் விளைபொருளை மதிப்பு கூட்டி விற்பனை செய்வது, கிசான் அட்டை, மண்வள அட்டை, கிசான் கார்டு மூலம் வட்டியில்லா கடன், மண் பரிசோதனை, தேவையான உரங்கள் என, 37 திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின், ஆறாக இருந்த அத்தியாவசிய சட்டங்களை, 17 ஆக அதிகரித்துள்ளனர். சிறு, குறு தானியங்கள், எண்ணெய் வித்துகள் எல்லாம் நடைமுறைப்படுத்தப்பட்டன.இந்த சட்டத்தில், குறைந்தபட்ச ஆதார விலை பற்றி ஏன் குறிப்பிடவில்லை?ஒப்பந்தத்தில் இதை உறுதிப்படுத்த கேட்கின்றனர். இது உண்மையான விவசாய சங்கங்களின் கோரிக்கை. பேச்சுக்கு மத்திய அரசு தயாராக உள்ளது.

விவசாய போராட்டத்துக்கு கனடா பிரதமரின் ஆதரவு சரியா?டென்மார்க்கில் இருந்து பால், மலேஷியாவில் இருந்து தேங்காய் உட்பட பல உலக நாடுகள், இந்திய சந்தையில் விற்க தயாராக உள்ளன. இங்குள்ள விவசாயிகள் விவசாயம் செய்யக்கூடாது என்பது அவர்கள் எண்ணம்.இதற்கான ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி கையெழுத்து போட மறுத்து விட்டார். நாட்டு மாட்டு பாலின் உண்மைத் தன்மையை நம் மக்கள் உணர்ந்துள்ளனர். சுயசார்பு இந்தியா இது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X