சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நீலகிரியில் தொடர் மழை ராட்சத மரங்கள் சாய்ந்தன

Added : டிச 07, 2020
Share
Advertisement
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தொடரும் மழையால், 10க்கும் மேற்பட்ட ராட்சத மரங்கள் விழுந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில், ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, கிளன்மார்கன், 4 செ.மீ., ஊட்டியில், 3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. ஊட்டி- - கூடலுார் சாலை உட்பட பல இடங்களில், 10க்கும் மேற்பட்ட ராட்சத மரங்கள், சாலையின் குறுக்கே விழுந்து,

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தொடரும் மழையால், 10க்கும் மேற்பட்ட ராட்சத மரங்கள் விழுந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில், ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, கிளன்மார்கன், 4 செ.மீ., ஊட்டியில், 3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. ஊட்டி- - கூடலுார் சாலை உட்பட பல இடங்களில், 10க்கும் மேற்பட்ட ராட்சத மரங்கள், சாலையின் குறுக்கே விழுந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் உடனுக்குடன் செயல்பட்டு, மரத்தை அகற்றியதால், போக்குவரத்து சீரானது. எமரால்டு, இத்தலார், எடக்காடு, பிக்கட்டி உள்ளிட்ட சில இடங்களில், மண்சரிவு ஏற்பட்டது.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ''நிவாரண முகாம்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. மக்கள் வசிக்கும் பகுதியில் பாதுகாப்பு இல்லை எனில், அருகில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வேண்டும். மரங்கள் விழும் நிலையில், அபாயகரமாக இருந்தால், உடனடியாக, 1077 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.

சூடு பிடிக்கும் சுற்றுலா

ஊட்டியில், சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடும் குளிர் நிலவுகிறது. மழையையும் பொருட்படுத்தாமல், நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்காக்களை ரசிக்க ஆயிரக்கணக்கான, சுற்றுலா பயணியர் வந்தனர்.கடும் குளிர் நிலவுவதால், குல்லா, ஸ்வெட்டர் விற்பனை சூடு பிடித்துள்ளது. கொரோனா தொற்றால் மூடப்பட்ட சுற்றுலா மையங்கள், எட்டு மாதங்களுக்கு பின், இன்று திறக்கப்படுகின்றன. இதனால், சுற்றுலாவை நம்பி இருந்த, சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X