சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.7 கோடி போதை கடத்தியவர்கள் கண்காணிப்பு கேமராவில் அம்பலம்

Added : டிச 07, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
கோவை: சூட்கேசில், 7 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை மறைத்து, விமான பயணியிடம் கொடுத்தவர்களை, கண்காணிப்பு கேமரா காட்டிக் கொடுத்தது.திருச்சி மாவட்டம், துவாக்குடியைச் சேர்ந்தவர், நாகரத்தினம், 44. நேற்று முன்தினம், சார்ஜா செல்வதற்காக கோவை வந்த இவர், தன் நண்பர்கள் காலி சூட்கேஸ் கொடுத்ததாகவும், அதுகுறித்து தனக்கு சந்தேகம் இருப்பதாகவும், மத்திய தொழில் பாதுகாப்பு
 ரூ.7 கோடி போதை கடத்தியவர்கள் கண்காணிப்பு கேமராவில் அம்பலம்

கோவை: சூட்கேசில், 7 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை மறைத்து, விமான பயணியிடம் கொடுத்தவர்களை, கண்காணிப்பு கேமரா காட்டிக் கொடுத்தது.

திருச்சி மாவட்டம், துவாக்குடியைச் சேர்ந்தவர், நாகரத்தினம், 44. நேற்று முன்தினம், சார்ஜா செல்வதற்காக கோவை வந்த இவர், தன் நண்பர்கள் காலி சூட்கேஸ் கொடுத்ததாகவும், அதுகுறித்து தனக்கு சந்தேகம் இருப்பதாகவும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் தெரிவித்தார். இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில், சூட்கேஸில், 7 கோடி ரூபாய் மதிப்பிலான, 1.2 கிலோ போதைப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், நாகரத்தினம், சவுதி அரேபியாவில், டிரைவராக பணிபுரிந்து வருவது தெரிந்தது.விபத்தில் சிக்கிய மனைவி, குழந்தையை பார்க்க, திருச்சி வந்தவர், கொரோனாவால் சவுதி அரேபியா செல்ல முடியவில்லை.மீண்டும் சவுதி அரேபியா செல்ல பணம் இல்லாததால், பலரிடம் உதவி கேட்டபோது, அதே பகுதியைச் சேர்ந்த அருள், அலிபாய் ஆகிய இருவரும் உதவி செய்வதாக கூறியது தெரிந்தது.

நாகரத்தினத்துடன் விமான நிலையம் வந்த இருவரும், காலி சூட்கேசை கொடுத்து, சவுதி அரேபியாவில் வந்து பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, சந்தேகம் ஏற்பட்டதால், நாகரத்தினம் சூட்கேசை போலீசாரிடம் ஒப்படைத்தது தெரிந்தது. விமான நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், இருவர், நாகரத்தினத்திடம் சூட்கேசை கொடுத்தது உறுதியானது.இதையடுத்து, அருள், அலிபாய் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிந்த போலீசார், தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரெட்டை வாலு ரெங்குடு - ரெட்டேரி ,இந்தியா
07-டிச-202013:17:58 IST Report Abuse
ரெட்டை வாலு ரெங்குடு திருடர்களின் சகவாசம் இருந்தால் நம்மையும் சனி பிடித்து ஆட்டும் என இந்த போதை பொருள் சிக்கிய நாகரத்தினத்திற்கு பாடமாக இருந்திருக்கும். குள்ளநரிகளின் கூட்டத்தில் இருந்து தப்பிக்க இவர் நல்ல படியாக சந்தேகத்தின் பேரில் போலீசாரின் உதவியை நாடி உள்ளார்.. இவருக்கு சிறிய தண்டனையோடு தப்பிப்பார்.. திருட்டு தொழிலுக்கு உடந்தையாக மூளை யாக செயல் பட்ட மூர்க்கர்/ திரிசம பேர்வழிகள் அருள், அலிபாய் அநேகமாக மாட்டுவது காலத்தின் தீர்ப்பு.. கண்டிப்பா கேப்பங்கழி தான் காவல்நிலையத்தில் கிடைக்கும்.. அநேகமா பாத்ரூமில் வழுக்கி விழவும் வாய்ப்பு ஜாஸ்தி.. முட்டிக்கு முட்டி தட்டி பல்லை உடைக்கவேணும் இந்த கயவர்களை விட்டு வைத்தால் பேராபத்து ..
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
07-டிச-202014:55:42 IST Report Abuse
தமிழவேல் இதுபோல அனுப்பி வைக்கிறவனுவோ, தங்கம் கொண்டு வர்றவனுவோ இவனுவோலாம் தண்டிக்கப் பட்டதா தகவல் இருக்கா ஜி ? அந்த சாமான்களாவது என்ன ஆகுதுன்னு தெரியுமா ? உங்களுக்கு ரெட்டை வாலு இருக்கிறது எனக்கு பொறாமையா இருக்கு. 😒...
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
07-டிச-202007:21:13 IST Report Abuse
RajanRajan எந்த ரூபத்திலும் கடத்தல் குறுக்குவழி துட்டு பார்க்கும் கூட்டம் பெருகி விட்டது. இந்த பயணி உஷாராக இருந்ததால் தப்பித்தார். சவுதியில் இவரை பிடித்திருந்தால் இவர் கதி நிர்கதிதான்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
07-டிச-202004:20:25 IST Report Abuse
J.V. Iyer யம்மாடி எப்படியெல்லாம் செய்யாறுவ.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X