காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் பகுதியில் சிறப்பு அதிகாரி ராஜேஷ் ஆய்வு செய்தார்.
புரெவி புயல் காரணமாக காட்டுமன்னார்கோவில் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக கன மழை பெய்தது. இதனால் காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதி முழுவதும் வெள்ளக்காடாகமாறியது. அதிக மழை மற்றும் வெள்ளியங்கால் ஓடை, மணவாய்க்காலில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் குடியிருப்புபகுதிகளில் தண்ணீர் புகுந்தது. பல கிராமங்கள் தீவுகளாகமாறி துண்டிக்கப்பட்டன.காட்டுமன்னார்கோவில் பகுதியில் எள்ளேரி, சர்வராஜன்பேட்டை, நெய்வாசல், வீரநத்தம், திருநாரையூர், சிறகிழந்தநல்லுார்போன்ற 15க்கும் மேற்பட்ட ஊர்களில் தண்ணீர் சூழ்ந்ததால் போக்குவரத்து தடைப்பட்டது.
1,000க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டன. இதனால்பாதித்த மக்கள் அந்தந்த ஊர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதிகளில் குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்த 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த7,166 பேர், 48 பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ சிகிச்சைவழங்கப்பட்டன.மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முகாம்களை சிறப்பு அதிகாரி ராஜேஷ், சப் கலெக்டர் மதிபாலன் ஆய்வு செய்தனர். தாசில்தார்கள் ராமதாஸ், ராஜவேல் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE