கடலுார் : மாற்றுத்திறனாளிகள் கல்வி உதவித்தொகை பெற, இம்மாதத்திற்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:2020--2021ம் நிதியாண்டிற்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு மற்றும் இளநிலை மற்றும் முதுநிலை பட்டய படிப்பு வரை பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
எனவே, மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் விண்ணப்பத்துடன் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல் உள்ளிட்ட தேவையான சான்றுகளை இணைத்து கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.இம்மாதம் கடைசி என்பதால் விரைவில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.மேலும் விவரங்களுக்கு 04142 284415 தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE