பொது செய்தி

தமிழ்நாடு

வெளி மாவட்ட தீயணைப்பு வீரர்கள் கடலுார் வருகை

Added : டிச 07, 2020
Share
Advertisement
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் மழை மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக 5 மாவட்ட தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.கடலுார் மாவட்டத்தில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. நீர் நிலைகள் நிரம்பி வருவதால் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்போர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.கடலுார் மாவட்டத்தில் மீட்பு பணியில்

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் மழை மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக 5 மாவட்ட தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

கடலுார் மாவட்டத்தில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. நீர் நிலைகள் நிரம்பி வருவதால் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்போர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.கடலுார் மாவட்டத்தில் மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக விழுப்புரம், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, பெரம்பலுார் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் 80 பேர் வரவழைக்கப்பட்டு, ரப்பர் படகு, மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும் உபகரணங்களுடன் மீட்பு பணியில்ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X