பொது செய்தி

தமிழ்நாடு

1 ஏக்கர் நிலத்தில் 15 வகை பயிர் சாகுபடி கொளத்துார் இயற்கை விவசாயி அசத்தல்

Added : டிச 07, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
மேட்டூர்: ஒரு ஏக்கர் நிலத்தில், ஐந்து அடுக்கு சாகுபடி முறையில், 15 வகை பயிர்களை, இயற்கை முறையில் சாகுபடி செய்து, விவசாயி சாதனை படைத்துள்ளார்.சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, கொளத்துார் மூலக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன், 54; மனைவி ஷியாமளா, 45. சுகாதாரத் துறை அலுவலராக பணிபுரிந்த குணசேகரன், விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.மனைவி ஷியாமளா எம்.எஸ்சி., சைக்காலஜி படித்து, ஆயத்த
 1 ஏக்கர் நிலத்தில் 15 வகை பயிர் சாகுபடி கொளத்துார் இயற்கை விவசாயி அசத்தல்

மேட்டூர்: ஒரு ஏக்கர் நிலத்தில், ஐந்து அடுக்கு சாகுபடி முறையில், 15 வகை பயிர்களை, இயற்கை முறையில் சாகுபடி செய்து, விவசாயி சாதனை படைத்துள்ளார்.

சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, கொளத்துார் மூலக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன், 54; மனைவி ஷியாமளா, 45. சுகாதாரத் துறை அலுவலராக பணிபுரிந்த குணசேகரன், விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.மனைவி ஷியாமளா எம்.எஸ்சி., சைக்காலஜி படித்து, ஆயத்த ஆடை தயாரிப்பில் ஈடுபட்டார். தம்பதியின் பார்வை, இயற்கை விவசாயத்தின் மீது திரும்பியது.

இதையடுத்து, 5 ஏக்கர் நிலத்தில் இயற்கை உரம் மற்றும் பூச்சி விரட்டிகளை பயன்படுத்தி, கருப்பு கவுனி அரிசி, ஆத்துார் கிச்சடி சம்பா உள்ளிட்ட நெல் ரகங்களை சாகுபடி செய்துள்ளனர்.மேலும், ஐந்து அடுக்கு சாகுபடி முறையில், ஒரு ஏக்கர் நிலத்தில், 15 வகை பயிர்களை சாகுபடி செய்து அசத்தியுள்ளனர்.இது குறித்து, குணசேகரன் கூறியதாவது:ஐந்து அடுக்கு சாகுபடி, ஆண்டு முழுதும் வருவாய் ஈட்டி தரும்.

ஒரே நிலத்தில் மரங்கள், செடிகள், கொடிகள் வளர்க்கும் முறை இது.என் நிலத்தில் தென்னை, பப்பாளி, வாழை, முருங்கை உள்ளிட்ட மரங்கள், அதன் அருகில், சேனைக்கிழங்கு, தக்காளி, இஞ்சி, மஞ்சள், மிளகாய்.வெண்டை, கத்தரி உள்ளிட்ட காய்கறி செடிகள், பீர்க்கங்காய், புடலை, பாவற்காய் உள்ளிட்ட கொடி வகைகள், உளுந்து, பச்சைப்பயறு மற்றும் பூ வகைகள் என, 15 வகை பயிர்கள் சாகுபடி செய்துள்ளேன்.காய்கறிகள் மூலம் தினசரி, வாரம்; மரங்கள் மூலம் ஆண்டுக்கு ஒரு முறை மற்றும் மூன்று முறை வருவாய் ஈட்ட முடிகிறது.

நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை.ஒரே நிலத்தில், பலவகை செடிகள் நடவு செய்வதால், அதன் வாசனையில் ஏற்படும் குழப்பம் காரணமாக, பூச்சிகள் தாக்கம் குறைவாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
07-டிச-202004:18:44 IST Report Abuse
J.V. Iyer வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X