நாகர்கோவில்: ''அம்பேத்கருக்கு பா.ஜ., பெருமை சேர்த்து வருகிறது'' என அக்கட்சியின் மாநில தலைவர் முருகன் கூறினார்.
நாகர்கோவிலில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த பின் அவர் கூறியதாவது: மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அம்பேத்கரை மறந்து செயல்பட்டது. பிரதமராக மோடி பொறுப்பேற்றதும் அம்பேத்கர் பிறந்த இடம், லண்டனில் படித்த இடம், அவர் வாழ்ந்த இடங்களை நினைவிடங்களாக மாற்றி அவருக்கு பெருமை சேர்த்தார்.
டில்லியில் அவரது பெயரில் 200 கோடி ரூபாய் செலவில் சர்வதேச ஆராய்ச்சி மையம், நினைவு நாணயம் வெளியிடப்பட்டது. பா.ஜ., அரசு தான் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.எத்தனை தடை வந்தாலும் திட்டமிட்டபடி இன்று திருச்செந்துாரில் வேல் யாத்திரை நிறைவு நிகழ்ச்சி நடைபெறும். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்த பிறகு தலைமையுடன் ஆலோசித்து கருத்து தெரிவிப்பேன்.
அவர் கட்சி துவங்குவதற்காக காத்திருக்கிறோம். அவரால் யாருக்கு பாதிப்பு என்பதை அறிய பொறுத்திருங்கள்.இவ்வாறு அவர் கூறினார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், மாஜி அமைச்சர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE