அரசியல் செய்தி

தமிழ்நாடு

உண்மை தெரியாத கமல்: அமைச்சர் பாய்ச்சல்

Added : டிச 07, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
தர்மபுரி: ''அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பா விவகாரத்தில், உண்மை நிலை தெரிந்து, கமல் பேச வேண்டும்,'' என, உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் கூறினார்.தர்மபுரியில் நேற்று அவர் கூறியதாவது:அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பா விவகாரத்தில், உண்மை நிலை தெரியாமல், கமல் பேசுகிறார். விசாரணை ஆணையம் அமைக்கப்பட்ட போது, அதை சந்திக்க தயார் எனக் கூறிய சுரப்பா, இது தொடர்பாக, அண்ணா
 உண்மை தெரியாத கமல்: அமைச்சர் பாய்ச்சல்

தர்மபுரி: ''அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பா விவகாரத்தில், உண்மை நிலை தெரிந்து, கமல் பேச வேண்டும்,'' என, உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் கூறினார்.

தர்மபுரியில் நேற்று அவர் கூறியதாவது:அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பா விவகாரத்தில், உண்மை நிலை தெரியாமல், கமல் பேசுகிறார். விசாரணை ஆணையம் அமைக்கப்பட்ட போது, அதை சந்திக்க தயார் எனக் கூறிய சுரப்பா, இது தொடர்பாக, அண்ணா பல்கலைக்கு தொடர்பில்லாத, மதுரையைச் சேர்ந்தவர் தொடுத்த வழக்கில், தன்னை இணைத்து கொண்டது ஏன்?பேராசிரியர்களை அரசு நியமிப்பது இல்லை என தெரிந்தும், அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில், பேராசிரியர் நியமனத்தில் லஞ்சம்பெற்றாக கூறியதால் தான், முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மீது, வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

எனவே, இதுகுறித்து உண்மையை அறிந்து, கமல் அறிக்கை வெளியிடலாம். கல்லுாரி, இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு, முதல்வர் மற்றும் அரசு வழிகாட்டுதல் இன்று கல்லுாரிகள் திறக்கப்படும். செய்முறை தேர்வை, கல்லுாரிகளில் தான் செய்ய முடியும் என்பதால், கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன. வெளியூர் மாணவர்களுக்கு, போதிய வசதி செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
07-டிச-202020:08:51 IST Report Abuse
spr பொதுவாக எதிர்க் காட்சிகள் என்றாலே அரசுக்கு எடுக்கும் எந்தவொரு முயற்சிக்கும் எதிர்ப்பு தெரிவிப்பதுதான் கமலஹாசனும் விதிவிலக்கல்ல ஆனாலும் முதன் முறையாக ஒரு நேர்மையான விஷயத்திற்கு குரல் கொடுக்கிறார் பாராட்டுவோம் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்ட போது, அதை சந்திக்க தயார் எனக் கூறிய சுரப்பா, இது தொடர்பாக, அண்ணா பல்கலைக்கு தொடர்பில்லாத, மதுரையைச் சேர்ந்தவர் தொடுத்த வழக்கில், தன்னை இணைத்து கொண்டது ஏன்? அவர் பேரில் தவறு இருக்க வாய்ப்பில்லை என்ற துணிச்சல்தானே ஆக தமிழக அரசின் குற்றச்சாட்டு குறிப்பாக அரசினைக் கேட்காமல் தன்னிச்சையாக செய்ல்படுகிறார் என்பதே பாஜகவின் உட்கையோ என்ற அச்சமே லஞ்சம் ஊழல் இவற்றில் தமிழர்களை விட பிற மாநிலத்தவர் குறைவாகவே கொள்ளையடிப்பவர்களே ஆனால் அரசு விசாரணை ஆரம்பித்தாற்போலத் தோன்றவில்லையே
Rate this:
skandh - Chennai,இந்தியா
08-டிச-202008:19:48 IST Report Abuse
skandhஏன் மதுரையில் வழக்கு. அண்ணா யூனிவர்சிட்டி சென்னையில் தானே இருக்கு. எல்லாம் கலைஞரிடம் ..வாங்கியவர்கள், உறவினர்கள் எங்கிருக்கிறார்கள்?...
Rate this:
Cancel
Ganesh Kumar - Riyadh,சவுதி அரேபியா
07-டிச-202013:57:08 IST Report Abuse
Ganesh Kumar These people both ADMK, DMK will spoil/damage the name of Anna University. From the past, until now many professors have done good work and they brought Anna University as one of the top university. Still now Anna University is good name in India as well as in the whole world. These two political parties will damage the name and because of this, finally the students who are getting degree in this university is going to suffer. It is well known to all people (except arrear students) that the government had filed case without any evidence, but no political parties is against this except Kamal. Very Very Worst. Because of doing all these type of non sense, they cannot increase the vote instead they are deliberately decreasing their vote bank. These things will definitely cause the minds of young and educated people to vote for nate parties such as Rajini, BJP etc
Rate this:
Cancel
07-டிச-202012:54:00 IST Report Abuse
தமிழ் நாட்டு அறிவாளி நீங்கள் சொல்லவது போல் பணம் நீங்கள் வாங்குவது இல்லை என வைத்துக் கொண்டாலும் தமிழக பல்கலைக்கழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக பணம் கொடுத்தால்தான் பேராசிரியர் பணி என்ற விவரம் தெரியாத அமைச்சராக இருக்காதீர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X