பொது செய்தி

தமிழ்நாடு

'பாரதிய கிசான் சங்கம் பங்கேற்காது'

Added : டிச 07, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
பாரதிய கிசான் சங்கத்தின் தேசிய செயலர் பெருமாள், மதுரையில் நேற்று அளித்த பேட்டி:பஞ்சாப் மாநில அரசு, மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களையும் ஏற்காமல், மாநில அளவில், மூன்று புதிய சட்டங்களை இயற்றி உள்ளது. அதில் குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயிகளுக்கான உறுதியான பணப் பட்டுவாடா மற்றும் விவசாய சிறப்பு நீதிமன்றம் அமைப்பதென தெரிவித்துள்ளது.மத்திய சட்டம் செல்லாது என அங்கே

பாரதிய கிசான் சங்கத்தின் தேசிய செயலர் பெருமாள், மதுரையில் நேற்று அளித்த பேட்டி:பஞ்சாப் மாநில அரசு, மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களையும் ஏற்காமல், மாநில அளவில், மூன்று புதிய சட்டங்களை இயற்றி உள்ளது.

அதில் குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயிகளுக்கான உறுதியான பணப் பட்டுவாடா மற்றும் விவசாய சிறப்பு நீதிமன்றம் அமைப்பதென தெரிவித்துள்ளது.மத்திய சட்டம் செல்லாது என அங்கே தெரிவித்த பின், பஞ்சாப் விவசாயிகள் ஏன் போராட வேண்டும்? அங்கே, 1,800 தரகு மண்டிகள் மூலம், 1.50 லட்சம் பேர் இடைத்தரகர்களாக செயல்படுகின்றனர். இதன் மூலம், 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பணப் பரிவர்த்தனை நடக்கிறது.

இவர்கள் சிறிய அளவில் விவசாயம் செய்தாலும், தரகு தொழிலில் தான் லாபம் பார்க்கின்றனர். மண்டி என்ற இடைத்தரகு செயல்பாடு நிறுத்தப்பட்டதால் தான் போராடுகின்றனரே தவிர, உண்மையாக விவசாயிகளுக்காக போராடவில்லை.மேலும், மூன்று மாநில போராட்டக்காரர்களும், டிச., 9ல் ஆறாம் கட்ட பேச்சுக்கு சம்மதித்து விட்டு, டிச., 8ல் போராட்டம் நடத்துவது சரியில்லை. போராட்டத்தால் பாதிக்கப்படுவது விவசாயிகளும், பொதுமக்களும் தான்.எங்கள் சங்க உறுப்பினர்கள், தமிழகத்தில் இரண்டு லட்சம் பேரும்; இந்தியா முழுக்க, 46 லட்சம் பேரும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
07-டிச-202015:21:18 IST Report Abuse
R.RAMACHANDRAN விவசாயிகளிடையே ஒற்றுமை இல்லாததால்தான் அவர்களை அரசியல்வாதிகள் ஏமாற்றுகின்றனர். மாநில அரசால் இயற்றப்பட்ட சட்டங்கள் குடியரசுத்தலைவரின் சம்மதம் பெற்றால் மட்டுமே மேலோங்கிய செயல் விளைவு உடையது ஆகும் இன்றேல் மத்திய சட்டம் மேலோங்கிய செயல் விளைவு உடையதாக இருக்கும் என அரசமைப்பு உறுப்பு 254 கூறுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X