விருத்தாசலம் : விருத்தாசலம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் ஜெ., நினைவு நாளில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மங்கலம்பேட்டையில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய செயலாளர் பாலதண்டாயுதம் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் ஜமால்முகமது, முன்னாள் பேரூராட்சி சேர்மன் பாஸ்கரன், அவைத் தலைவர் அப்பாதுரை, முன்னாள் கவுன்சிலர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர். அதில், ஜெ., படத்திற்கு மாலை அணிவித்து, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஒன்றிய துணை செயலாளர் வேல்முருகன், மாணவரணி இணை செயலாளர் தேவிபிரசாத், பொருளாளர் புகழேந்தி, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஆனந்தகுமார், மணிமாறன், ஆராமுதன், சுப்ரமணியன், நிர்வாகிகள் பிரபாகரன், பட்டுகுமார், ஆறுமுகம், கருப்பன், சுப்ரமணியன், விக்னேஷ், சிவபிரகாசம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ரவி உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE