புவனகிரி : அம்பாபுரம் ஊராட்சியில் 1,500 பேருக்கு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில், ஏற்பாடு செய்யப்பட்ட உணவு பொட்டலங்களை சேர்மன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வழங்கினர்.
மேல் புவனகிரி ஊராட்சி ஒன்றியம், அம்பாபுரம் ஊராட்சியில், ஊராட்சி தலைவர் விசுவேல்முருகன் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருகிறார். நேற்று ஊராட்சியில் வசிக்கும் 1,500 பேருக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்தார்.நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் விசுவேல்முருகன் தலைமை தாங்கினார். சேர்மன் சிவப்பிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (வ.ஊ) சக்தி, சண்முகமணி (கி.ஊ) ஆகியோர் நேரில் பங்கேற்று உணவு பொட்டலங்களை வழங்கி, பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூறினர்.
கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கர், ஒன்றிய பொறியாளர்கள் சுரேஷ், வசந்தகுமார், மண்டல துணை பி.டி.ஓ., பிரேம்குமார், ஊராட்சி கழக செயலர் ஜெயசீலன், ஊராட்சி துணைத் தலைவர் வாசுகி, கூட்டுறவு வங்கி தலைவர் பிரித்திவ், ஊராட்சி செயலர் (பொறுப்பு) சுதாகர், உழவர் மன்ற தலைவர் செல்வக்குமார், தன்னார்வலர்கள் சிவா, ராஜீவ் காந்தி, சிவசூர்யா, மணிவண்ணன், மாதவன், சக்திவேல், சபரி, பிரகாஷ் மற்றும் அப்பகுதி இளைஞர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE