விருத்தாசலம் : விருத்தாசலத்தில் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சார்பில் முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு நாளில் விளக்கேற்றி, அ.தி.மு.க., வெற்றி பெற சபதம் ஏற்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு நாளையொட்டி, மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் ஆலோசனையின்படி, கலைச்செல்வன் எம்.எல்.ஏ., நகர செயலாளர் சந்திரகுமார் முன்னிலையில் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு சார்பில் விருத்தாசலம் நீதிமன்றம் முன் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.மாவட்ட இணை செயலாளர் அரசு வழக்கறிஞர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.
ஜெ., படத்திற்கு மாலை அணிவித்து, விளக்குகள் ஏற்றி சபதம் ஏற்கப்பட்டது. வழக்கறிஞர்கள் ராஜேந்திரன், சதீஷ்குமார், காசிவிசுவநாதன், கலைமுருகன், 27வது வட்ட செயலர் வீரப்பன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன், நிர்வாகிகள் முருகன், வேலு, பாலசுப்ரமணியன், மோகன்ராஜ், இளைஞரணி பிரேம், குமாஸ்தா சங்கர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE