கம்மாபுரம் : கம்மாபுரம் அருகே வீடு இடிந்து விழுந்ததில், எட்டு ஆடுகள் இறந்தன.கம்மாபுரம் அடுத்த கோ.பொன்னேரி கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி ஞானஜோதி, சக்திவேல்; ஆகியோர் வளர்த்து வந்த ஆடுகளை, ஓட்டு வீட்டின் அருகில் கட்டி வைத்திருந்தனர்.இந்நிலையில், நேற்று அதிகாலை பெய்த கனமழைக்காரணமாக ஓட்டு வீடு இடிந்து விழுந்ததில், 10 ஆடுகள் படுகாயமடைந்தது. அதில், 8 ஆடுகள் சம்பவ இடத்திலேயே இறந்தன. இச்சம்பவம் குறித்து, வருவாய்த்துறையினர், கால்நடைத்துறையினர் விசாரணை செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE