கடலுார் : கடலுாரில் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி மஞ்சக்குப்பத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க.,: அமைச்சர் சம்பத் தலைமை தாங்கி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நகர செயலர் குமரன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலர் குமார், நகர துணை செயலர் கந்தன், ஒன்றிய செயலர் பழனிசாமி, மாநில மருத்துவரணித் தலைவர் சீனுவாசராஜா, மாவட்ட மீனவரணி செயலர் தங்கமணி, அண்ணா தொழிற்சங்க செயலர் காசிநாதன், விவசாய அணி செயலர் காசிநாதன், தொழிலதிபர் ராமலிங்கம், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணித் தலைவர் கெமிக்கல் மாதவன் பங்கேற்றனர்.
தி.மு.க.,: மாநில தேர்தல் பணிக்குழு செயலர் புகழேந்தி, முன்னாள் எம்.எல்.ஏ., அய்யப்பன் தலைமை தாங்கி மாலை அணிவித்தனர். மாவட்ட அவைத் தலைவர் தங்கராசு, நகர செயலர் ராஜா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வக்கீல் சுந்தர் பங்கேற்றனர்.நகர காங்.,:மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மாநில பொதுக்குழு உறுப்பினர் சாந்திராஜ், மாவட்ட பொதுச் செயலர்கள் ரமேஷ், காமராஜ், மாநில ஊடகப்பிரிவு வாழப்பாடி கண்ணன், வினு சக்கரவர்த்தி, அருள், நகர செயலர்கள் சங்கர், கோபால், மாரிமுத்து, பாலகுரு பங்கேற்றனர்.
மாணவர் காங்.,:மாவட்டத் தலைவர் முகேஷ் தலைமையில், மாநில பொதுச் செயலர் மணிவண்ணன் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளர் கட்சியின் அகில இந்திய உறுப்பினர் வக்கீல் சந்திரசேகரன் மாலை அணிவித்தார். இளைஞர் காங்., மாவட்டத் தலைவர் கலையரசன், ஓ.பி.சி., பிரிவு மாநில செயலர் உமாபதி, மாவட்டத் தலைவர் ராமராஜன், எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாவட்டத் தலைவர் ஆனந்தன் பங்கேற்றனர்.
வி.சி:பார்லிமென்ட் தொகுதி செயலர் தாமரைச்செல்வன் தலைமையில் மாநில அமைப்பு செயலர் திருமார்பன், நகர செயலர்கள் செந்தில், ராஜதுரை பங்கேற்றனர்.பகுஜன் சமாஜ்:மாவட்ட பொருளாளர் விஜயகாந்த் மாலை அணிவித்தார்.மாநில இளைஞரணி செயலர் சுரேஷ், கங்கை அமரன் பங்கேற்றனர்.தமிழ்நாடு அரசு எஸ்.சி.,-எஸ்.டி., அலுவலர் நலச்சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் ஆனந்தன் தலைமையில் செயலர் ஞானசேகரன், பொருளாளர் அருண்குமார், செல்வகுமார், பிரபாகரன், சிகாமணி, தமிழ்ச்செல்வன், பாஸ்கரன், ரவி மாலை அணிவித்தனர்.
சிதம்பரம்: காட்டு மன்னார்கோவில் பஸ் நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அ.தி.மு.க., அமைப்பு செயலாளர் முருகுமாறன் எம்.எல்.ஏ., தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில்முன்னாள் எம்.எல்.ஏ.,ராஜேந்திரன்,ஒன்றிய செயலாளர் சிவகுமார், மாவட்ட பிரதிநிதி பாலசந்தர் நிர்வாகிகள் வேல்முருகன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கருணா, குமராட்சி ஒன்றிய பேரவை இணை செயலர் இளஞ்செழியன், அத்திப்பட்டு ஊராட்சி தலைவர் ஜெயக்குமார், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் சுரேஷ்குமார், பாரதிதாசன்,பாக்கியராஜ், செல்வரங்கம் கவாஸ்கர், கிருபாசங்கர், கொத்தங்குடி ராதாகிருஷ்ணன், ஒற்றப்பாளையம் அன்பழகன், அருண்மொழித்தேவன் ராமலிங்கம், ஆண்டிபாளையம் பாண்டியன், ராஜீவ் காந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE