டிச., 7, 1926
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள கணியூரில், 1926, டிச., 7ல் பிறந்தவர், கே.ஏ.மதியழகன். திராவிடக் கொள்கையில் ஈடுபாடு உடையவர். தி.மு.க., உருவான போது, அண்ணாதுரைக்கு உறுதுணையாக இருந்தார். சிறந்த பேச்சுத் திறன் உடைய அவர், தி.மு.க.,வின், ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக மதிக்கப்பட்டார். கட்சி போராட்டங்களில் ஈடுபட்டு, சிறை வாசம் அனுபவித்தார்.
அண்ணாதுரை தலைமையிலான, தி.மு.க., அமைச்சரவையில் நிதி, உணவு மற்றும் வருவாய் துறைஅமைச்சராக பதவி வகித்தார்.அ.தி.மு.க., உருவானபோது, எம்.ஜி.ஆருடன் இணைந்து செயல்பட்டார். 1971ல், சட்டசபை சபாநாயகராக பணியாற்றினார். தென்னகம் என்ற இதழைத் துவக்கி, அதன் ஆசிரியராக இருந்தார். 'நன்றி யாருக்கு?' உட்பட சில நுால்கள் எழுதியுள்ளார். 1983 ஆக., 17ல், தன், 57வது வயதில் காலமானார்.முன்னாள் அமைச்சர் கே.ஏ.மதியழகன் பிறந்த தினம் இன்று!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE