எலுரு: ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில், புதிய வகை நோயால் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான, ஒய்.எஸ்.ஆர்., காங்., ஆட்சியில் நடக்கிறது.
இம்மாநிலத்தின் மேற்கு கோதாவரி மாவட்டம் எலுரு நகரில் வசிக்கும் மக்களில் பலருக்கும், நேற்று முன்தினம் திடீரென வலிப்பு ஏற்பட்டது. வாயில் நுரை தள்ளிய நிலையில், பலரும் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பாதிப்பிற்கு உள்ளான, 228 பேர், எலுரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். டாக்டர்களின் உடனடி சிகிச்சை யால், குணமடைந்த சிலர், வீடு திரும்பினர்.
இருப்பினும், 76 பெண்கள் மற்றும் 46 சிறுவர், சிறுமியர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிப்புக்கு உள்ளானவர்கள் வெவ்வெறு பகுதிகளில் வசிப்பவர்கள் என்பதுடன், இவர்களுக்கிடையே எவ்வித தொடர்பும் இல்லை என்பதால், பொதுமக்களிடையே நோய் குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, பாதிப்பிற்கு உள்ளானோர் வசிக்கும் பகுதிகளில், சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொண்டுஉள்ளனர்.
எலுரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரிடம், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அல்ல நானி உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.அவர் கூறும்போது, ''இந்த பாதிப்பு தொடர்பாக சிறப்பு மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இவர்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. இவர்களுக்காக எலுரு மற்றும் விஜயவாடா மருத்துவமனைகளில் சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE