பொது செய்தி

தமிழ்நாடு

பயணிகள் நிழற்கூரை பயன்பாட்டுக்கு இல்லை

Added : டிச 07, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில், கருமாபுரம் பிரிவில், நான்கு ஆண்டுகளுக்கு முன், எம்.பி., நிதியில் நிழற்கூரை கட்டப்பட்டது.நிழற்கூரைக்குள், அத்துமீறி மது அருந்துவதால், பயணிகள் பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். சில நேரங்களில் வடமாநில தொழிலாளர்கள் போதையில், அங்கேயே படுத்துவிடுகின்றனர். காலி மதுபாட்டில்கள் உடைத்தும், உணவு பொருட்களை கொட்டியும் அலங்கோலம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில், கருமாபுரம் பிரிவில், நான்கு ஆண்டுகளுக்கு முன், எம்.பி., நிதியில் நிழற்கூரை கட்டப்பட்டது.நிழற்கூரைக்குள், அத்துமீறி மது அருந்துவதால், பயணிகள் பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். சில நேரங்களில் வடமாநில தொழிலாளர்கள் போதையில், அங்கேயே படுத்துவிடுகின்றனர். காலி மதுபாட்டில்கள் உடைத்தும், உணவு பொருட்களை கொட்டியும் அலங்கோலம் செய்கின்றனர். இந்நிலையில், நிழற்கூரைக்குள் இருந்த பயணிகள் அமரும் கான்கிரீட் இருக்கைகளை உடைத்துள்ளனர்.ஊராட்சி நிர்வாகமும் கண்டுகொள்ளாத நிலையில், சிதறிக்கிடந்த இருக்கைகள் அடுக்கி, நிழற்கூரைக்குள் பயணிகள் நுழைய முடியாத படி அடுக்கி வைத்துள்ளனர்.பலமுறை புகார் தெரிவித்தும், போதை ஆசாமிகள் பிடியில் இருந்து நிழற்கூரையை மீட்கவும், சீரமைக்கவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. அத்துமீறலை தடுக்க போலீசார் முன்வரவில்லை. இதனால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X