பொள்ளாச்சி:பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், வாழை, மரவள்ளி மற்றும் தக்காளி சாகுபடிக்கு, பயிர் காப்பீடு மேற்கொண்டு, இழப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு, பயிர் காப்பீடு மேற்கொண்டு, பலத்த மழை, வெள்ளம், வறட்சி உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்பிலிருந்து, தங்களை காத்துக்கொள்ள வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.இழப்பை தவிர்க்க, பயிர் காப்பீடு மேற்கொள்ள வேண்டும் என அறிவித்துள்ள அரசு, உரிய தொகையை செலுத்தி காப்பீடு செய்து கொள்ள வலியுறுத்தியுள்ளது.பொள்ளாச்சி வடக்கு தோட்டக்கலைத்துறை அறிக்கை:வடக்கு ஒன்றியத்தில் பல்வேறு பயிர்கள் சாகுபடியில் இருப்பினும், அதிக பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள வாழை, மரவள்ளி மற்றும் தக்காளிக்கு மட்டும் பயிர் காப்பீடு மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.ஒரு ெஹக்டேர் வாழை சாகுபடிக்கு, பிரீமிய தொகையாக, 10,917 ரூபாய், மரவள்ளி சாகுபடிக்கு 3,917 ரூபாய் மற்றும் தக்காளி சாகுபடிக்கு, 3,501 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும்.இதற்காக, சாகுபடி மேற்கொள்ளப்பட்ட நிலத்தின் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கிக்கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும். தக்காளி சாகுபடிக்கான காப்பீடு பிப்., 15ம் தேதிக்குள்; வாழை மற்றும் மரவள்ளி பயிருக்கு காப்பீடு மேற்கொள்ள, மார்ச் 1ம் தேதி கடைசி நாளாகும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE