பொது செய்தி

தமிழ்நாடு

மழைக்கு முன் உழவு அவசியம்

Added : டிச 07, 2020
Share
Advertisement
ஆனைமலை:'மழைக்கு முன், மானாவாரி நிலங்களில் கட்டாயம் உழவு மேற்கொள்ள வேண்டும்,' என, விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.ஆனைமலை அடுத்த சோமந்துறைசித்துாரில், வேளாண்துறை மற்றும் 'அட்மா' சார்பில், நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை குறித்து, விவசாயிகளுக்கு ஆலோசனைக்கூட்டம் நடந்தது.அட்மா தொழில்நுட்ப மேலாளர் மேகலாதேவி, தோட்டக்கலைத்துறை அலுவலர் லட்சுமிபதி முன்னிலை

ஆனைமலை:'மழைக்கு முன், மானாவாரி நிலங்களில் கட்டாயம் உழவு மேற்கொள்ள வேண்டும்,' என, விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.ஆனைமலை அடுத்த சோமந்துறைசித்துாரில், வேளாண்துறை மற்றும் 'அட்மா' சார்பில், நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை குறித்து, விவசாயிகளுக்கு ஆலோசனைக்கூட்டம் நடந்தது.அட்மா தொழில்நுட்ப மேலாளர் மேகலாதேவி, தோட்டக்கலைத்துறை அலுவலர் லட்சுமிபதி முன்னிலை வகித்தனர். இதில், விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி கையேடு வழங்கப்பட்டது.வேளாண் அலுவலர் ஸ்ரீமதி தலைமை வகித்து பேசியதாவது:நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை திட்டத்தில், எட்டு கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் தலா, 100 ஹெக்டேர் மானாவாரி நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு, சோளம், தட்டைப்பயறு, நிலக்கடலை சாகுபடி செய்ய தொழில்நுட்ப அறிவுரை வழங்கப்படுகிறது.மானாவாரி விவசாயிகளுக்கு, 50 சதவீதம் அரசு மானியத்தில், விதை, உரம் உள்ளிட்ட இடுபொருட்கள்; உழவு மேற்கொள்ள ஏக்கருக்கு, 500 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. ஒன்றியம் முழுவதிலும் மழைக்கு முன், மானாவாரி நிலங்களில் கட்டாயம் உழவு மேற்கொள்ள வேண்டும்.இதனால், அதிக மழைநீர் மண்ணில் புகுவதுடன், மண்ணிலுள்ள நோய், பூச்சிகள் அழிந்து, பயிர் செழிப்படையும். அதேபோல், விவசாயிகள் விதை நேர்த்தி செய்து, விதைப்பை துவங்க வேண்டும்.இவ்வாறு, பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X