பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலக பணியாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் நடந்தது.பள்ளி கல்வித்துறை சார்பில், கல்வித்துறை அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பணியாற்றும் அலுவலக பணியாளர்களுக்கான, இரண்டு நாள் பயிற்சி முகாம், புனித லுார்து அன்னை மழலையர் மற்றும் துவக்கப்பள்ளியில் நடந்தது.பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலரின் நேர்முக உதவியாளர் யசோதா நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலர் (பொ) வெங்கடேஷ்வரன் தலைமை வகித்தார்.பேரூர் கல்வி மாவட்ட அலுவலர் ரமேஷ்குமார், பேரூர் கல்வி மாவட்ட நேர்முக உதவியாளர் பால்ராஜ் ஆகியோர் பயிற்சி அளித்தனர். அதில், வட்டார கல்வி அலுவலக அமைப்பும், அலுவலக நடைமுறைகளும், அலுவலக தலைவர்களின் பொறுப்புகள், கடமைகள், பள்ளி பார்வை, ஆண்டாய்வு குறித்தும் விளக்கப்பட்டது.பணப்பலன்கள், கடவுச்சீட்டு பெற தடையின்மை சான்று, அலுவலகத்தில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள், தன் பதிவேடுகள் மற்றும் தொடர்புடைய பதிவேடுகள்; ஊக்க ஊதிய உயர்வு, ஊதிய நிர்ணயம், தேர்வுநிலை, சிறப்பு நிலை, உயர் கல்வி பயில முன் அனுமதி, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.கடிதங்கள், கோப்புகள், விடுப்பு விதிகள், தகவல் அறியும் உரிமைச்சட்டம், முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள், பணிவரன் முறை உள்ளிட்ட விபரங்கள் குறித்தும் விளக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE