பொள்ளாச்சி:புரவிபாளையம் அருகே, புலிப்பாறை செல்லும் வழித்தடம், 13.27 லட்சம் ரூபாய் செலவில் ஓரடுக்கு கப்பி சாலையாக மாற்றப்பட்டது.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், புரவிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட களத்துார் பகுதியில், பழமையான புலிப்பாறை தடுப்பணை அமைந்துள்ளது.தடுப்பணை மற்றும் விவசாய தோட்டங்களுக்கு செல்லும் வழித்தடம், புதர் சூழ்ந்து, கரடுமுரடானமண் பாதையாக இருந்தது.இப்பாதையில், 100 மீ., துாரத்தில், களத்துார் கிராமத்தின் மயானம் அமைந்துள்ளது. நீண்ட நாள் கோரிக்கையை தொடர்ந்து, வேலை உறுதி திட்டத்தில், மயானம் செல்லும் பாதை, 13.27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஓரடுக்கு கப்பி சாலையாக மாற்றப்பட்டது.மேலும், 100 மீ., துாரத்தில் புலிப்பாறை தடுப்பணை உள்ளதால், அப்பகுதிக்கு செல்லும் பாதையில் உள்ள புதரை அகற்ற வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE