பொது செய்தி

தமிழ்நாடு

குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு

Added : டிச 07, 2020
Share
Advertisement
ஆனைமலை:பொள்ளாச்சி, ஆழியாறு குரங்கு அருவியில், கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.பொள்ளாச்சி அடுத்த வால்பாறை மலையடிவாரத்தில், குரங்கு அருவி உள்ளது. வால்பாறை எஸ்டேட் பகுதியில் உள்ள சோலைக்காடுகளில் இருந்து, அருவிக்கு நீர் வரத்து உள்ளது. வார விடுமுறை மற்றும் அரசு விடுமுறை நாட்களில், ஆழியாறு, வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் பலரும் குரங்கு அருவிக்கு சென்று

ஆனைமலை:பொள்ளாச்சி, ஆழியாறு குரங்கு அருவியில், கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.பொள்ளாச்சி அடுத்த வால்பாறை மலையடிவாரத்தில், குரங்கு அருவி உள்ளது. வால்பாறை எஸ்டேட் பகுதியில் உள்ள சோலைக்காடுகளில் இருந்து, அருவிக்கு நீர் வரத்து உள்ளது. வார விடுமுறை மற்றும் அரசு விடுமுறை நாட்களில், ஆழியாறு, வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் பலரும் குரங்கு அருவிக்கு சென்று குளித்து மகிழ்கின்றனர்.தற்போது, கொரோனா பாதிப்பால் அருவியில் குளிக்க, சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அருவியில் நீர் வரத்து அதிகரித்து, நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, சுற்றுலா பயணிகள் அருவிக்குள் நுழைவதை தடுக்க, வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X