பொது செய்தி

தமிழ்நாடு

மூணாறு ரோட்டில் அச்சுறுத்தும் அபாய வளைவு! இரு மாநில போக்குவரத்தில் இடையூறு

Added : டிச 07, 2020
Share
Advertisement
உடுமலை:உடுமலை - மூணாறு ரோட்டிலுள்ள அபாய வளைவு பகுதி பல ஆண்டுகளாக மேம்படுத்தப்படாமல், மழைக்காலங்களில், போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.உடுமலையிலிருந்து மூணாறு செல்லும் ரோட்டில், சின்னாறு வரையுள்ள, 28.80 கி.மீ., மாவட்ட முக்கிய ரோடு பிரிவின் கீழ் நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்டத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி

உடுமலை:உடுமலை - மூணாறு ரோட்டிலுள்ள அபாய வளைவு பகுதி பல ஆண்டுகளாக மேம்படுத்தப்படாமல், மழைக்காலங்களில், போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.உடுமலையிலிருந்து மூணாறு செல்லும் ரோட்டில், சின்னாறு வரையுள்ள, 28.80 கி.மீ., மாவட்ட முக்கிய ரோடு பிரிவின் கீழ் நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்டத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகங்களின் வழியாக செல்லும் ரோட்டில், சின்னாறு அருகே அபாய வளைவு பகுதி உள்ளது. மழைக்காலங்களில், ரோட்டில் ஏற்படும் சேதங்கள் மட்டும் குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிக்கப்படுகிறது.இந்த ரோட்டில், 18வது கி.மீ.,ல் இருபுறங்களிலும் மலைச்சரிவுடன் குறுகலாக கொண்டை ஊசி வளைவு அமைந்துள்ளது. இந்த வளைவில், நாள்தோறும் உடுமலையிலிருந்து மறையூர், மூணாறுக்கு நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.இந்த அபாய வளைவில், இரு வாகனங்கள் விலகிச்செல்ல முடியாத அவல நிலை உள்ளது. சரக்கு லாரிகள் செல்லும் போது, எதிரே வரும் வாகனங்கள் அபாய வளைவில், காத்திருக்க வேண்டியுள்ளது. வளைவின் இருபுறங்களிலும், நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்ட இரும்பு தடுப்பு, வலுவிழந்துள்ளது. அப்பகுதியில், விபத்துகள் ஏற்படும் போது, போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்படுகிறது. தொடர் மழையால், கொண்டை ஊசி வளைவு பகுதியில், மண் சரிந்து, ரோட்டோரம் முழுவதுமாக அரிக்கப்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் திரும்பும் போது, கட்டுப்பாடு இழந்து, பள்ளத்தில், இறங்கும் அபாயம் உள்ளது.இரு மாநில போக்குவரத்தில், முக்கிய பங்கு வகிக்கும், ரோட்டில், அபாய வளைவை மேம்படுத்தி, விரிவாக்க பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X