வால்பாறை:வால்பாறையில், தேயிலை தொழிலாளர்கள் போதிய மருத்துவ வசதி இல்லாமல் தவிக்கின்றனர். இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் ஒரு மருத்துவர், நர்ஸ், உதவியாளர் கொண்ட, இரண்டாயிரம் மினி கிளினிக்குகள் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.வரும், 15ம் தேதி முதல் மினி கிளினிக் திட்டம் செயல்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், வால்பாறையில் மினி கிளினிக் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது.வால்பாறை ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் பாபுலட்சுமணனிடம் கேட்ட போது, ''ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், தமிழக அரசு மினி கிளினிக் துவங்கப்படவுள்ளது. மலைப்பகுதியான வால்பாறையில் மினி கிளினிக் அமைப்பதால், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மிகவும் பயன்பெறுவார்கள். சோலையாறு எஸ்டேட் பகுதியில் மினி கிளினிக் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது,' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE