பொது செய்தி

தமிழ்நாடு

மழைநீர் வடிகால் கட்டும் பணி துவக்கம்: மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் கட்ட வலியுறுத்தல்

Added : டிச 07, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அரசு மருத்துவமனை அருகே, மழைநீர் வடிகால் கட்டும் பணிகள் நடக்கிறது. இந்நிலையில், இடிக்கப்பட்ட மருத்துவமனை சுற்றுச்சுவர், கட்டடம் ஆகியவை கட்ட வேண்டும், என, கோரிக்கை எழுந்துள்ளது.உடுமலை, பழநி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், பொள்ளாச்சி வழியாக கேரளா, கோவைக்கு சென்று வருகின்றன. இந்நிலையில், நகரில் ரோடுகள் குறுகலாக இருப்பதால்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அரசு மருத்துவமனை அருகே, மழைநீர் வடிகால் கட்டும் பணிகள் நடக்கிறது. இந்நிலையில், இடிக்கப்பட்ட மருத்துவமனை சுற்றுச்சுவர், கட்டடம் ஆகியவை கட்ட வேண்டும், என, கோரிக்கை எழுந்துள்ளது.உடுமலை, பழநி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், பொள்ளாச்சி வழியாக கேரளா, கோவைக்கு சென்று வருகின்றன. இந்நிலையில், நகரில் ரோடுகள் குறுகலாக இருப்பதால் நெரிசல் பிரச்னை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டதுடன், அவசரப்பணிக்காக செல்லும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் வேகமாக செல்ல முடியாத நிலை உள்ளது.இந்நிலையில், நகரில் நெரிசலை கட்டுப்படுத்த, முக்கிய சாலைகளை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்த வேண்டும் என, ஆலோசிக்கப்பட்டது. இதற்காக நிலம் கையகப்படுத்த, 33.57 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டு நிலம் கையகப்படுத்தப்பட்டன.தற்போது, நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிக்கு, 34.51 கோடி ரூபாய் நிதி, தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடக்கிறது. மரங்கள் அகற்றம், கட்டடம் இடிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த சில நாட்களுக்கு முன், ரோடு விரிவாக்கப்பணிக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கட்டடங்கள் இடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.கட்டடம் இடிக்கப்பட்ட நிலையில், பொள்ளாச்சி அம்மா உணவகம் முதல், அரசு மருத்துவமனை வரை மழைநீர் வடிகால் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மழைநீர் வடிகால் கட்டப்பட்டு, சிலாப் அமைத்து நடைபாதையாக மேம்படுத்தப்படுகிறது.இந்நிலையில், மின்கம்பங்கள் இடமாற்றம் செய்யப்படாமல் உள்ளன. தபால் அலுவலகம் அருகே மட்டும் டிரான்ஸ்பார்மர் இடமாற்றம் செய்யப்பட்டது. தேர்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்கம்பங்கள் மாற்றப்படாமல் உள்ளது. மின் கம்பங்களை மாற்ற நடவடிக்கை எடுத்து, ரோடு விரிவாக்கப்பணிகளை துவக்கி, விரைவாக நிறைவு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.ரோடு விரிவாக்க பணிக்காக, அரசு மருத்துவமனை கட்டடங்கள், சுற்றுச்சுவர்கள் இடிக்கப்பட்டு அலங்கோலமாக காட்சியளிக்கிறது. மழைநீர் வடிகால் கட்டும் பணிகளை விரைந்து முடிப்பதுடன், இடிக்கப்பட்ட கட்டடம் மற்றும் சுற்றுச்சுவரையும் உடனடியாக கட்ட வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X