மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே மலையாண்டிபட்டிணம் பகுதியில் குவாரி உள்ளது. இங்கு, கிருஷ்ணகிரி அருகேயுள்ள பெரிய ஜோத்தம்பட்டியைச்சேர்ந்த கிருஷ்ணசாமி, 20 ஆண்டுகளுக்கும் மேலாக பொக்லைன் ஆப்ரேட்டராக பணியாற்றுகிறார்.இவரது மகன் தமிழரசன், 19, இவருடன் தங்கியிருந்தார். நேற்று குவாரி பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் இறங்கி, பொக்லைைன சுத்தம் செய்யும் பணியில் இருவரும் ஈடுபட்டுள்ளனர்.அப்போது அவரது மகன் கவனக்குறைவால், நீரில் தவறி விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாத காரணத்தால் பாறை இடுக்கில் சிக்கி இறந்தார். அவரின் தந்தை உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த துறையினர் சிறிது நேரத்தில், தமிழரசனின் உடலை மீட்டனர். கணியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE