கரும்புக்கடை மார்க்கமாக செல்லும் பஸ்களுக்கு கேள்வி
மின் கம்பத்தை மாற்றணும்போத்தனுார், செட்டிபாளையம், பத்தாவது வார்டு, கோனார் வீதியில் உள்ள, மின் கம்பம் சிதிலமடைந்துள்ளது. இக்கம்பத்தை மாற்ற வேண்டும்.- ஜம்பு, செட்டிபாளையம்.
சாக்கடை கால்வாய் வசதியில்லைமாநகராட்சி, 97வது வார்டுக்கு உட்பட்ட, சுந்தராபுரம், அஷ்டலட்சுமி நகர், விஸ்வேஸ்வரா பள்ளி அருகில், சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால், கழிவுநீர் சாலையில் ஓடுகிறது.- குமாரவேல், அஷ்டலட்சுமி நகர்.
சிக்னல் அருகே ரோடு மோசம்சத்தி ரோடு, சரவணம்பட்டி போக்குவரத்து சிக்னல் அருகில், சாலை குண்டும் குழியுமாக உள்ளது; வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.- ரவி, சரவணம்பட்டி.
தார் சாலை அமைக்கணும்சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, மேம்பாலம் அருகில் உள்ள, மோகன் நகரில், சாக்கடை கால்வாய், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதியில்லை. இங்கு தார் சாலை அமைக்க வேண்டும்.- நாதன், மோகன் நகர்.
பஸ் கட்டணத்தை குறைக்கணும்உக்கடம் மேம்பாலம் கட்டுமான பணி நடப்பதால், பொள்ளாச்சி ரோடு மற்றும் பாலக்காடு ரோட்டில் இயக்கப்படும்பஸ்கள் புட்டு விக்கி பாலம் வழியாக சென்று வந்தன; அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. கடந்த ஒரு மாதமாக, ஒருசில பஸ்கள் மீண்டும் கரும்புக்கடை வழியாகவே இயக்கப்படுகின்றன. ஆனாலும், கட்டணம் மட்டும் குறைக்கப்படவில்லை.- சந்திரன், மதுக்கரை.
ஆபத்தான மின் கம்பம்செட்டிபாளையம், சமத்துவபுரம், மூன்றாவது வீதியில் உள்ள, மின் கம்பத்தின் மேல் பகுதி, சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது.- துரை, சமத்துவபுரம்.
கோவில் முன் குவியுது குப்பைகுறிச்சி மயானம் செல்லும் வழியில் உள்ள, சுப்ரமணியர் கோவில் முன், குவியும் குப்பை முறையாக அப்புறப்படுத்தப்படுவதில்லை. காற்றில் பறக்கும் குப்பை, கோவில் வளாகத்துக்குள் விழுந்து, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- சிதம்பரம், குறிச்சி.
சாலை முழுவதும் குப்பைமருதமலை ரோடு, நவாவூர் பிரிவு, குருசாமி நகர் ஐந்தாவது வீதியில், துாய்மை பணியாளர்கள் பணிக்கு வராததால், குப்பை சாலை முழுவதும், சிதறிக்கிடக்கிறது. சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- தங்கராஜ், குருசாமி நகர்.
சாக்கடை கால்வாய் அடைப்புகணபதி, அத்திபாளையம் ரோடு, வெங்கடசாமி நகர், ஏ.எஸ்.கே.கார்டனில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவு நீர் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது.- ராமசுப்ரமணியம், வெங்கடசாமி நகர்.
சாலையை சீரமைக்கணும்பன்னிமடை - திப்பனுார் ரோடு, குண்டும் குழியுமாக உள்ளது; வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.- தனசேகர், பன்னிமடை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE