பொது செய்தி

தமிழ்நாடு

என்ன செய்யப்போகிறது வீட்டு வசதி வாரியம்? சிங்காநல்லூரில் குடியிருப்போரை காப்பாற்றுமா

Added : டிச 07, 2020
Share
Advertisement
கோவை:எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையிலுள்ளது, சிங்காநல்லுாரிலுள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான, வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள்.கனமழை பெய்ய உள்ளதாக, வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், வீட்டுவசதி வாரியமும் மேற்கொள்ள வேண்டும்.கோவை மாநகராட்சி, 64வது வார்டு சிங்காநல்லுார் உழவர்

கோவை:எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையிலுள்ளது, சிங்காநல்லுாரிலுள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான, வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள்.கனமழை பெய்ய உள்ளதாக, வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், வீட்டுவசதி வாரியமும் மேற்கொள்ள வேண்டும்.கோவை மாநகராட்சி, 64வது வார்டு சிங்காநல்லுார் உழவர் சந்தைக்கு அருகே 17.55 ஏக்கரில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான, 960 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளன.இந்த வீடுகள், 30 ஆண்டுகளுக்கு முன், வாரியத்தால் கட்டி விற்பனை செய்யப்பட்டன. தற்போது சிதிலமடைந்து எப்போது விழுமோ என்ற நிலையிலுள்ளன. கடந்த ஆண்டு டிச.,15ல் துணை முதல்வர் பன்னீர்செல்வம், நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, சிதிலமடைந்த வீடுகளை காலி செய்து, வாரியத்திடம் ஒப்படைத்தால் விரைவில் வீட்டுவசதி வாரியம் புதிய வீடுகளை கட்டித்தரும் என்று கூறிச்சென்றார். துணை முதல்வர் அறிவித்து ஓராண்டு நிறைவடைந்தும், ஒரு சிறு கல் கூட நகர்த்தப்படவில்லை.இச்சூழலில், 'புரெவி' புயலால் தமிழகம் முழுக்க, தொடர்ந்து கனமழை பெய்யும் என்று, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, ஆபத்தான இக்கட்டடத்தின் பாதுகாப்பு கேள்விக்குரியதாகி உள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக, நடவடிக்கை எடுக்க வேண்டும்.போர்ட்டிகோ இடிந்து வீட்டார் படுகாயம்கடந்த மாதம் 28ம் தேதி, சிங்காநல்லுார் வீட்டுவசதி வாரிய குடியிருப்பிலுள்ள, 538 எண் கொண்ட வீட்டின் போர்ட்டிகோ இடிந்து விழுந்தது. வீட்டிலிருந்தவர்கள் படுகாயமடைந்தனர். ஆகவே, கனமழைக்கு முன்பு, இவ்வீடுகளில் வசிப்போரின் பாதுகாப்பை உறுதி செய்ய, வீட்டுவசதி வாரியம் முன்வர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X