கோவை:முதலீடு மானிய வரம்பை, புதிய வரையறைக்கு ஏற்ப,25 லட்சத்தில் இருந்து, 1 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க, 'போசியா' வேண்டுகோள் விடுத்துள்ளது.கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர்(போசியா) தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்:குறு மற்றும் சிறு தொழிலகங்கள், இன்னும் முழுமையானஇயல்பு நிலைக்கு திரும்பவில்லை. தமிழக அரசு, குறுந்தொழிற்சாலைகளுக்கு இயந்திர முதலீட்டுத்தொகைக்கு, 'கிரெடிட் லிங்க்டு கேபிட்டல் சப்சிடி' திட்டத்தின் மூலம், 25 சதவீத மானியம் வழங்கி வருகிறது.இந்த மானியம், 25 லட்சம் ரூபாய் வரையிலான, முதலீட்டுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில், மத்திய அரசு குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான வரையறைகளை, சமீபத்தில் மாற்றி அமைத்துள்ளது. அதன்படி, குறுந்தொழில்கள், 1 கோடி ரூபாய் வரை இயந்திரம் மற்றும் தளவாடங்களில் முதலீடு செய்யலாம்.எனவே, தமிழக அரசு முதலீடு மானிய வரம்பை, புதிய வரையறைக்கு ஏற்ப, தற்போது உள்ள, 25 லட்சத்தில் இருந்து, 1 கோடி ரூபாயாக உயர்த்தி, அரசாணை வெளியிட வேண்டும். இதன் வாயிலாக, குறுந்தொழில்கள் பெரிதும் பயன்பெறுவதுடன், விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பவும் வழிவகுக்கும்.இவ்வாறு, கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE