தமிழ்நாடு

பயணிகளிடம் சிரித்த முகம் காட்டுங்க! டிரைவர், கண்டக்டர்களுக்கு அறிவுரை

Updated : டிச 07, 2020 | Added : டிச 07, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
கோவை:இன்று உயர்கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் நிலையில், சலுகை பாஸ் பயன்படுத்தும் மாணவர்கள், பயணிகளின் மனம் புண்படாத வகையில், இன்முகத்துடன் பணிபுரிய வேண்டுமென அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக, பல்கலை, கல்லுாரிகளில் முதுகலை இறுதியாண்டு, ஆராய்ச்சி மாணவர்களுக்கு கடந்த வாரம் வகுப்புகள் துவங்கின.இன்று முதல்,
பயணிகளிடம் சிரித்த முகம் காட்டுங்க! டிரைவர், கண்டக்டர்களுக்கு அறிவுரை

கோவை:இன்று உயர்கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் நிலையில், சலுகை பாஸ் பயன்படுத்தும் மாணவர்கள், பயணிகளின் மனம் புண்படாத வகையில், இன்முகத்துடன் பணிபுரிய வேண்டுமென அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக, பல்கலை, கல்லுாரிகளில் முதுகலை இறுதியாண்டு, ஆராய்ச்சி மாணவர்களுக்கு கடந்த வாரம் வகுப்புகள் துவங்கின.இன்று முதல், இளநிலை இறுதியாண்டு கலை, அறிவியல், இன்ஜி., வேளாண், தொழில்நுட்ப கல்லுாரிகள், பல்கலை மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்குகின்றன.
எட்டு மாதங்களுக்கு பிறகு மாணவர்கள், பஸ்களில் பயணிக்க துவங்குகின்றனர்.பல்வேறு இலவச பாஸ்களை பரிசோதித்து, அனுமதிக்க வேண்டும்; மாணவர்கள், ஆசிரியர்கள் வருகையால், பஸ்களில் பழையபடி நெரிசல் ஏற்படும் என்பதால், கண்டக்டர்கள் கடிந்து கொள்ளாமல், இன்முகத்துடன் பணிபுரியஅறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை கோட்ட அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:கொரோனா பாதிப்புகளுக்கு மத்தியில், பயணிகளிடம் கனிவான அணுகுமுறையும், வழிநடத்தலும் அவசியம்.கண்டக்டர்கள் சிலர் மாணவர்களை கடிந்து கொள்வதாகவும், டிரைவர்கள் ஸ்டாப்பில் நிறுத்துவதில்லை என்ற புகார்களும் வருவதுண்டு.
இனி இவற்றைதவிர்த்து, பஸ் பாஸ்சரிபார்த்து, அவர்கள் மனம் புண்படாத வகையில் இன்முகத்துடன் பணிபுரிய டிரைவர், கண்டக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், நோயை கட்டுப்படுத்த மாஸ்க் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை, பயணிகள் அனைவரும் கடைபிடிப்பது அவசியம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-டிச-202003:54:04 IST Report Abuse
பிரேம் அரசுப்பேருந்து டிரைவர்கள் இன்னமும் திருந்தாமல் பேருந்தை விதிமுறை மீறி இயக்குகிறார்கள்.. யார் தான் நடவடிக்கை எடுப்பது...
Rate this:
Cancel
07-டிச-202011:43:29 IST Report Abuse
ஆப்பு இவிங்க சாலைகளை பராமரிக்காமல் கண்ராவியா வெச்சிருப்பாங்க. அங்கங்கே டூ வீலர்களை நிறுத்தி வெச்சிருப்பதை தடுக்க மாட்டாங்க. போட்ட சிக்னல்களில் 90 சதவீதம் வேலை செய்யாது. டிரைவர்களும், கண்டக்டர்களும் நல்லாத்தான் இருக்காய்ங்க. தப்பு இவிங்க மேலேதான் அதிகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X