நடுத்தர மக்களுக்கு, எந்த சேமிப்பு பழக்கம் சிறந்ததாக இருக்கும்?
சேமிப்பு என்பதே வளர்ச்சிக்கான அடித்தளம். செலவு போக மீதமுள்ளதை எடுத்து வைப்பது சேமிப்பு இல்லை. வருமானத்தின் ஒரு பகுதியை, சேமிப்புக்கு ஒதுக்கிய பின்பே செலவை மேற்கொள்ள வேண்டும். யாராக இருந்தாலும், வருமானத்துக்கு ஏற்ப சேமிப்பை கட்டாயம் திட்டமிட வேண்டும். நிலையான வருமானம் இருப்பவர்கள், தினக் கூலியாக இருந்தாலும் ஆர்.டி., (Recurring Deposit) முறையையும், மூன்று மாதம், ஆறு மாதம், ஆண்டுக்கு ஒரு முறை என வருமானம் வருபவர்கள் எப்.டி., (Fixed Deposit) முறையையும் தேர்வு செய்யலாம்.தங்கப்பத்திரம் மூலம் சேமிப்பது, என்பது எந்த வகையில் லாபம்?
வங்கி டெபாசிட்டுக்கு, 6 முதல் 7 சதவீதம் வரையே வட்டி வழங்கப்படும். கடந்த பத்து ஆண்டுகளில், தங்கத்தின் மதிப்பு ஆண்டுக்கு பத்து சதவீதம் விலை ஏறியுள்ளது; ஒருபோதும் குறையவில்லை. தங்கப்பத்திரத்தில் முதலீடு செய்வதால், திரும்பப்பெறும் பொழுது தங்கத்தின் அன்றைய விலை மட்டுமின்றி, மினிமம் வட்டித்தொகையும் பெற முடியும். பணத்திற்கு பாதுகாப்பு இருப்பதுடன், வங்கியில் லோன் வாங்கவும், அவசர தேவைகளுக்கும் பயன்படும்.சேமிப்புக்கு தங்க நகை சிறந்ததா அல்லது நாணயங்கள் சிறந்ததா?
தங்கத்தில் முதலீடு செய்வது எப்போதும் சிறந்தது. நிதியின் அளவை பொறுத்து, நகை அல்லது நாணயமாக சேமிக்கலாமா என்ற முடிவெடுக்க முடியும். நாணயத்தை பொறுத்தவரையில் செய்கூலி, சேதாரம் இழப்பு இருக்காது. அன்றைய தங்கத்தின் விலைக்கு விற்றுவிடலாம். நகையாக வாங்கினால், செய்கூலி, சேதார இழப்பு கட்டாயம் இருக்கும். வங்கிகளில் நகைக்கு மட்டுமே அடமான கடன் கிடைக்கும். மியூச்சுவல் பண்டு பற்றி கூறுங்களேன்...?
மியூச்சுவல் பண்டு என்பது, நம்மால் தொழில் செய்ய முடியாத போது, நன்றாக முன்னேறும் ஓர் தொழில் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு, நம்மால் முடிந்த தொகையை முதலீடாக செலுத்தி, அவர்கள் பெறும் லாபத்தின் வாயிலாக, நாம் வருமானம் பெறுவது. இதில், பல சந்தை அபாயங்கள் உள்ளன. தெளிவான வழிகாட்டுதலுடன் முதலீடு செய்தால், நல்ல லாபம் பெற முடியும்.கட்டாயம் அனைவரும் வருமானத்துக்கு ஏற்ப, முதலீடு செய்ய வேண்டும். அங்கீகாரம் இல்லாத சீட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்களில் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.முதல்தலைமுறை பட்டதாரிகளுக்கு, தொழில், கல்வி கடன் பெறுவதில் சலுகை உள்ளதாக கூறப்படுகிறதே... அது குறித்து கூறுங்கள்?
முதல்தலைமுறை பட்டதாரிகளுக்கு, மாவட்ட தொழில்மையம் மூலம் சலுகையுடன், கடன் வழங்கப்படுகிறது. கல்விக்கடனை பொறுத்தவரையில், அனைத்து படிப்புகளிலும், டியூஷன் கட்டணத்தில் இருந்து, 50 சதவீதம் அரசு செலுத்தி விடும். ஆதிதிராவிட மாணவர்களுக்கு, 100 சதவீத டியூஷன் கட்டணத்தை, அரசே செலுத்தி விடும்.எம்.எஸ்.எம்.இ., தொழில் கடன் குறித்து, பெரிதாக விழிப்புணர்வு இல்லையே...?
உண்மை தான்! கொரோனா சமயத்தில் வேலை இழந்தவர்கள், தொழில் ஆர்வம் உள்ளவர்கள் நல்ல தொழில் புராஜக்ட் திட்டம் இருப்பின், வங்கிகளில் எம்.எஸ்.எம்.இ., திட்டத்தின் கீழ், ரூ.10 லட்சம் வரை, எவ்வித செக்யூரிட்டியும் இன்றி, கடன் பெற முடியும். அழகு நிலையம், தையல் கடை என சிறு, குறு, நடுத்தர தொழில் துவங்க நினைப்பவர்கள், தயங்காமல் இக்கடனை பெற முயற்சிக்கலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE