பொது செய்தி

தமிழ்நாடு

இன்ஜி., மாணவர் சேர்க்கை 31ம் தேதி வரை நீட்டிப்பு

Added : டிச 07, 2020
Share
Advertisement
கோவை:இன்ஜி., கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை, வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்துள்ளது.இன்ஜி., படிப்புக்கான கவுன்சிலிங், ஆண்டுதோறும் ஆக., இறுதிக்குள் நடத்தி முடிக்கப்படும். கொரோனா பரவல், இன்ஜி., படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வான, சி.இ.டி., முடிவுகள் வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, பல மாநிலங்களில் இன்ஜி.,

கோவை:இன்ஜி., கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை, வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்துள்ளது.இன்ஜி., படிப்புக்கான கவுன்சிலிங், ஆண்டுதோறும் ஆக., இறுதிக்குள் நடத்தி முடிக்கப்படும். கொரோனா பரவல், இன்ஜி., படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வான, சி.இ.டி., முடிவுகள் வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, பல மாநிலங்களில் இன்ஜி., கவுன்சிலிங் நடத்தி முடிக்கப்படாமல் உள்ளது. இதுபோன்ற காரணங்களால், நடப்பாண்டு இன்ஜி., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வரும், 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக, இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் நான்கு கட்டங்களாக பொது கவுன்சிலிங் நடத்தி முடிக்கப்பட்டு கடந்த, 23ம் தேதி முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கு, வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. நான்கு கட்ட கவுன்சிலிங் முடிந்தும், பல்வேறு கல்லுாரிகளில், 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட இன்ஜி., இடங்கள் காலியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X