காற்றில் சாய்ந்த நெற்கதிர் :கவலையில் விவசாயிகள்| Dinamalar

காற்றில் சாய்ந்த நெற்கதிர் :கவலையில் விவசாயிகள்

Added : டிச 07, 2020
Share
கூடலுார்:கூடலுார் குணில் பகுதியில் காற்றில், நெற்கதிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.கூடலூர் பகுதியில், நடப்பாண்டு, 250 ஏக்கர் பரப்பளவில், நெல் பயிரிட்டனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக, சில பகுதிகளில் மிதமான மழையும் காற்றும் வீசியது. தொரப்பள்ளி பகுதியில் மழையுடன் வீசிய காற்றில் குணில் பகுதி வயல்களில் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்கதிர்கள் சாய்ந்து,

கூடலுார்:கூடலுார் குணில் பகுதியில் காற்றில், நெற்கதிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.கூடலூர் பகுதியில், நடப்பாண்டு, 250 ஏக்கர் பரப்பளவில், நெல் பயிரிட்டனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக, சில பகுதிகளில் மிதமான மழையும் காற்றும் வீசியது. தொரப்பள்ளி பகுதியில் மழையுடன் வீசிய காற்றில் குணில் பகுதி வயல்களில் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்கதிர்கள் சாய்ந்து, வீணானது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.விவசாயிகள் கூறுகையில்,'நடப்பாண்டு, நல்ல மகசூல் கிடைத்துள்ளது. ஓரிரு வாரங்களில் அறுவடை பணிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில், காற்றில் நெற்கதிர்கள் சாய்ந்துள்ளது. ஏற்கனவே, காட்டு யானைகளிடம் இருந்து, பயிரை பாதுகாக்க முடியாமல் போராடி வரும் நிலையில், தற்போது,மழை; காற்றால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்ய அரசு இழப்பீடு வழங்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X