கோவில்பாளையம்:வாழைக்கு காப்பீடு செய்ய, விவசாயிகளுக்கு, தோட்டக்கலை துறை அழைப்பு விடுத்துள்ளது.சர்க்கார் சாமக்குளம் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் அனிஷா பேகம் வெளியிட்டுள்ள அறிக்கைபிரதம மந்திரி பசல் பீமா யோஜனா என்னும் பயிர் காப்பீடு திட்டத்தில், எஸ்.எஸ். குளம் வட்டாரத்திலுள்ள, ஏழு ஊராட்சிகள் மற்றும் இரண்டு பேரூராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.கன மழை, புயல், வறட்சி மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கும் போது, பயிர் காப்பீடு உதவுகிறது. வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள், ஒரு எக்டேருக்கு, 10 ஆயிரத்து 917 ரூபாய் செலுத்தினால் போதும். இயற்கை சீற்றத்தில் பயிர் சேதம் அடைந்தால், ஒருவருக்கு, இரண்டு லட்சத்து 18 ஆயிரத்து 349 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்.விவசாயிகள், தங்கள் பகுதியில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம், பொது சேவை மையம் ஆகியவற்றை அணுகி, சிட்டா, ஆதார், வங்கி பாஸ்புக் நகல் ஆகியோருடன் சமர்ப்பித்து, பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE