மேட்டுப்பாளையம்:நெல்லித்துறையில், 380 குடும்பத்தினர் வசிப்பதால், முழு நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.நெல்லித்துறை கிராமத்தை சுற்றி, விளாமரத்துார், பூதப் பள்ளம், நந்தவனப்புதுார் என, நான்கு கிராமங்கள் உள்ளன. இந்த நான்கு கிராமங்களில், 380 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு நெல்லித் துறையில் உள்ள, பகுதி நேர ரேஷன் கடையில், பொருட்கள் வழங்கப்படுகின்றன. கிராம மக்கள், ரேஷன் பொருட் கள் வாங்க, ஒரு நாள் வேலைக்கு லீவு போட வேண்டியுள்ளது.இது குறித்து நெல்லித்துறை மக்கள் கூறியதாவது: பகுதி நேர ரேஷன் கடை, செவ்வாய், வெள்ளி ஆகிய இருநாட்கள் மட்டுமே திறந்திருக்கும்.இந்த இரு நாட்களில், நான்கு கிராம மக்களும்,ரேஷன் பொருட்கள் வாங்க வருவதால், கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. நீண்ட வரிசையில் காத்திருந்து பொருட் களை வாங்க, பல மணி நேரம் ஆகிறது. இதனால் ரேஷன் பொருட்களை வாங்க, ஒருநாள் லீவு போட வேண்டி உள்ளது.பொது மக்கள் நலன் கருதி, நெல்லித்துறையில் தற்போது உள்ள பகுதி நேர ரேஷன் கடையை, முழு நேர ரேஷன் கடையாக மாற்றம் செய்து, எல்லா நாட்களிலும் ரேஷன் பொருட்கள் விற்பனை செய்ய, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொது மக்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE