உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
எஸ்.ராமசுப்ரமணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
மத்திய, மாநில தேர்தல் ஆணையங்கள், சரியாக செயல்படுவதில்லை. அக்கறையுடன் தேர்தல்களை நடத்துவதாக, நடிக்கின்றன. உண்மையில், அலட்சியமாகவே நடத்தி முடிக்கின்றன.
நாங்கள் வசிக்கும், எலிம் நகர் முதல் மெயின் ரோட்டில், 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அங்குள்ள, 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.ஆனால், எங்கள் குடும்பத்தை மட்டும், வர்கீஸ் தெருவிற்கு, தேர்தல் ஆணையம் மாற்றி உள்ளது.எலிம் நகரில் இருக்கும் எங்கள் வீட்டை மட்டும், தேர்தல் ஆணையம் எப்படி வர்கீஸ் தெருவிற்கு துாக்கிச் சென்றது?மேலும், ஒரு வீட்டில், தந்தைக்கும், மகனுக்கும், 45 வயது என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அது எப்படி சாத்தியம்?அடுத்தது, தாய்க்கு, 25 வயது; அவரின் மகனுக்கு, 43 வயது. இந்தக் கொடுமை எல்லாம், தேர்தல் ஆணையத்தில் நடக்கிறது.

இந்தப் பிழைகளை சரி செய்ய, அவர்கள் பல போராட்டங்களை சந்திக்க வேண்டும். தேர்தல் ஆணையம், சம்பந்தப்பட்டோரை அலைக்கழிக்கச் செய்யும்.ஆசிரியர்கள், வீடு வீடாக சென்று, வாக்காளர் விபரங்களை சேகரித்தபோது, இவ்வளவு குழப்பம் ஏற்பட்டதில்லை.வாக்காளர் பட்டியல், கணினிமயமாக்கப்பட்டு, 'அவுட் சோர்சிங்' முறையில், ஆட்களை நியமித்து விபரம் சேகரிக்கப்பட்ட போது தான், இவ்வளவு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.வாக்காளர் பட்டியலையே முறையாக, சரியாகத் தயாரித்து வழங்க முடியாத மத்திய, மாநில தேர்தல் ஆணையங்கள், தேர்தலை மட்டும் எப்படி ஒழுங்காக நடத்தும்?
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE