சென்னை: தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலுக்காக களம் இறங்கி, வேலை செய்யத் துவங்கி விட்டன. இலவசங்களை அள்ளி வீசக் கூடிய தேர்தல் அறிக்கைகளை தயார் செய்வதில், அனைத்துக் கட்சிகளும் இறங்கியுள்ளன. தமிழக, பா.ஜ., தலைவர் முருகனும், கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு ஒரு திட்டத்தை, டில்லி தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.
'இந்த திட்டத்தை அறிக்கையில் சேர்த்தால், நமக்கு ஓட்டுகள் அதிகம் கிடைக்கும்' என, பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவிடம், அவர் கூறியுள்ளார். நாட்டில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்கள், மசூதிகள், சர்ச் ஆகிய இடங்களை சுற்றிப் பார்த்து வர, ஒரு சிறப்பு ரயில் விடப்படும். காசி, மத்தியப் பிரதேசத்தில் உள்ள காளி கோவில், ராஜஸ்தானில் உள்ள முஸ்லிம்களின் முக்கிய புனித தலங்கள் என, பல இடங்களுக்கு இந்த ரயில் செல்லும்.'மூத்த குடிமக்களுக்கு, இந்த பயணம் இலவசம் என, தேர்தல் அறிக்கையில் சொல்ல வேண்டும்' என, முருகன் கூறியுள்ளாராம்.

இதற்கு, டில்லி தலைவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.ஹிந்துக்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து மதத்தினருக்கும் ஏற்ற கட்சி, பா.ஜ., என தெரிவிப்பதற்காக இந்த திட்டமாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE