மேற்கு வங்கத்தில் இன்னும் சில நாட்களில், 100வது பிறந்த நாள் கொண்டாட உள்ள மூதாட்டி, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளார்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது.இம்மாநிலத்தின் ஹவுரா மாவட்டத்தைச் சேர்ந்த, 100 வயது மூதாட்டி பாபடாரினி சமந்தா, கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மூச்சுத்திணறல் உட்பட பல்வேறு பாதிப்புகளுடன் இருந்த அவருக்கு, சிறப்பு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
இதன் வாயிலாக கொரோனா பாதிப்பில் இருந்து, மூதாட்டி முழுமையாக மீட்கப்பட்டார். இன்னும் சில நாட்களில், 100வது பிறந்த நாள் கொண்டாட உள்ள அவரை, மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வழியனுப்பும் விழா, நேற்று முன்தினம் நடந்தது.இதில் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் பணியாளர்கள் பலரும் பங்கேற்று பாடல்கள் பாடியதுடன், அவருக்கு மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE