பொது செய்தி

இந்தியா

கட்டாய மதமாற்றத்துக்கு 10 ஆண்டு சிறை; மத்திய பிரதேச அரசும் அதிரடி சட்டம்

Updated : டிச 07, 2020 | Added : டிச 07, 2020 | கருத்துகள் (52)
Share
Advertisement
போபால்: மத்திய பிரதேசத்தில், கட்டாய மதமாற்றம் செய்வோருக்கு, 10 ஆண்டு கள் சிறை தண்டனை வழங்கும் புதிய சட்ட மசோதாவை, மாநில அரசு பரிந்துரைத்துள்ளது.மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. பெண்களை திருமணம் செய்து, வலுக்கட்டாயமாக மதம் மாற்றும், 'லவ் ஜிகாத்' முறைக்கு எதிராக, சமீப காலமாக, கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

போபால்: மத்திய பிரதேசத்தில், கட்டாய மதமாற்றம் செய்வோருக்கு, 10 ஆண்டு கள் சிறை தண்டனை வழங்கும் புதிய சட்ட மசோதாவை, மாநில அரசு பரிந்துரைத்துள்ளது.latest tamil news


மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. பெண்களை திருமணம் செய்து, வலுக்கட்டாயமாக மதம் மாற்றும், 'லவ் ஜிகாத்' முறைக்கு எதிராக, சமீப காலமாக, கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதையடுத்து, உ.பி.,யில், சமீபத்தில் அதற்காக அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.

மத்திய பிரதேசத்திலும், கட்டாய மதமாற்றம் செய்வோரை தண்டிக்கும் வகையில், 'மத சுதந்திர சட்டம்' என்ற சட்ட மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா, இம்மாதம் துவங்கவுள்ள சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரின்போது, தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த சட்ட மசோதாவில் கூறப்பட்டுஉள்ளதாவது:மத சுதந்திர சட்ட மசோதாவின்படி, மதமாற்றத்திற்காக மட்டும் செய்யப்படும் இது போன்ற திருமணங்கள், சட்டப்படி செல்லாது என, அறிவிக்கப்படும்.


latest tamil news


இந்த சட்டத்தை மீறி வலுக்கட்டாயமாக மதம் மாற்றுவோருக்கு, ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். குறிப்பாக, 'மைனர்' சிறுமி அல்லது எஸ்.சி.,- எஸ்.டி., பிரிவைச் சேர்ந்த பெண்ணை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வோருக்கு, 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். ஒரே நேரத்தில், பலரை மதமாற்ற முயற்சிக்கும் நபர்களுக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganesh M - Bangalore,இந்தியா
07-டிச-202020:50:57 IST Report Abuse
Ganesh M கிறிஸ்தவ மத மாற்றம் குறித்து ஒன்றும் செய்ய முடியாது.கிறிஸ்டின் மத மாற்றத்தை தடுக்க ஏதாவது வழி இருக்க னு பாருங்க.ஹிந்துக்களை கிறிஸ்தவத்துக்கு மாற்றும் ப்ராஜெக்ட் ஐ சோனியா காந்தி எடுத்திருக்காங்க.இந்தியா வை சீக்கிரம் கிறிஸ்து நாடு என்று அறிவிக்கும் ப்ராஜெக்ட் அது.இந்தியா வில் எங்கு பார்த்தாலும் கிறிஸ்தவ மத மாற்றம் தான் இருக்கு .ஸ்கூல்,காலேஜ்,வேலை அலுவலகம் எங்கும் மத மாற்றம் தான்.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
07-டிச-202017:21:46 IST Report Abuse
Endrum Indian உண்மையில் காதலித்து திருமணமா இல்லவே இல்லை இதன் பெயரே லவ் ஜிஹாத் காதல் என்னும் பெயரில் கொலை செய்வது. ஐ எஸ் ஐ சிடம் பணம் வாங்கிக்கொண்டு, பெண்ணை ஏதோ கட்டாய நிக்காஹ் செய்து கொண்டு. அவளை கொஞ்ச நாள் இவன் உடல் உறவு கொண்டு பிறகு அவன் தந்தை தனயன் உறவுக்காரர்கள் கெடுத்து அவள் எதற்கும் உபயோகமில்லை என்று சொல்லி ஐ எஸ் ஐ எஸ் ஸுக்கு கொண்டு சென்று விற்பது தானே லவ் ஜிஹாத். அது தான் தவறு என்று எல்லோரும் சொல்கின்றனர்.
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
07-டிச-202017:09:32 IST Report Abuse
Thiagarajan Kodandaraman யோகி மாதிரி நீங்கழும் வீர ஆண் மஹன் என்று நிரூபித்து விட்டீகள் ...வாழ்க உம தேச பக்தி ....பாரத் மாதாகி ஜெய்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X