அவுரங்காபாத்: மஹாராஷ்டிராவின், அவுரங்காபாத் நகர பஸ்களில், பயணியரின் நடவடிக்கைகளை கண்காணிக்க, நடத்துனரின் சட்டையில் கேமரா பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்குள்ள அவுரங்காபாத் நகராட்சி, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டங்களை நடைமுறைபடுத்தி வருகிறது.இதன் ஒரு பகுதியாக, அவுரங்காபாத் ஸ்மார்ட் சிட்டி மேம்பாட்டு கழகம் சார்பில், நகரில், 100 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், மஹாராஷ்டிரா சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள், ஓட்டுனர்களாகவும், நடத்துனர்களாகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
சமீபத்தில், பெண் நடத்துனர்களிடம், சில பயணியர் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது.இதையடுத்து, பயணியரின் நடத்தையை கண்காணிக்க, அவுரங்காபாத் ஸ்மார் சிட்டி மேம்பாட்டு கழகம் முடிவு செய்தது.இதற்காக, நடத்துனரின் சட்டை பையில், கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, டிக்கெட் வினியோகம் மற்றும் பயணியரின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும்.
மேலும், பஸ்களில் ஆய்வு மேற்கொள்ள, முன்னாள் ராணுவ வீரர்களை, கள ஆய்வாளர்களாக நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இவர்கள், பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், அவர்களின் நடவடிக்கைகள் குறித்து, அதிகாரிகளிடம் தகவல் தெரிவிப்பர் என கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE