இல்லை! கால்வாய் திட்டத்தில் பாசனம் பெறும் உசிலம்பட்டி கண்மாய்கள்... மழையின்றி வறண்டு கிடக்கும் நிலைமை | Dinamalar

தமிழ்நாடு

இல்லை! கால்வாய் திட்டத்தில் பாசனம் பெறும் உசிலம்பட்டி கண்மாய்கள்... மழையின்றி வறண்டு கிடக்கும் நிலைமை

Updated : டிச 07, 2020 | Added : டிச 07, 2020
Share
உசிலம்பட்டி : மாநிலத்தின் பிற பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவில் பெரும்பாலான கண்மாய்கள் வறண்டு கிடக்கின்றன. இத்தாலுகாவில் செல்லம்பட்டி ஒன்றியத்தின் பெரும்பகுதிதிருமங்கலம் பிரதான கால்வாய் பாசனம் பெறுகின்றன. கால்வாய் மேற்கே உள்ள பகுதி மற்றும் உசிலம்பட்டி ஒன்றியத்திலும் மழையின்றி கண்மாய்களுக்கு நீர்வரத்து இல்லை.
இல்லை! கால்வாய் திட்டத்தில் பாசனம் பெறும்  உசிலம்பட்டி கண்மாய்கள்... மழையின்றி வறண்டு கிடக்கும் நிலைமை

உசிலம்பட்டி : மாநிலத்தின் பிற பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவில் பெரும்பாலான கண்மாய்கள் வறண்டு கிடக்கின்றன.

இத்தாலுகாவில் செல்லம்பட்டி ஒன்றியத்தின் பெரும்பகுதிதிருமங்கலம் பிரதான கால்வாய் பாசனம் பெறுகின்றன. கால்வாய் மேற்கே உள்ள பகுதி மற்றும் உசிலம்பட்டி ஒன்றியத்திலும் மழையின்றி கண்மாய்களுக்கு நீர்வரத்து இல்லை. சிறிய மழை பெய்தாலும் நிரம்பும் குஞ்சாம்பட்டி, கருக்கட்டான்பட்டி, மாதரை, நல்லுத்தேவன்பட்டி கண்மாய்களில் வெட்டுக் குழிகளில் மட்டும் தண்ணீர் உள்ளது. உசிலம்பட்டி, கீரிபட்டி, ஆனையூர், பாப்பாபட்டி, திம்மநத்தம், பூதிப்புரம், சிறுபட்டி, உச்சிக்கண்ணம்பட்டி, வகுரணி, புதுக்கோட்டை, பாறைப்பட்டி, முத்துவீரம்பட்டி கண்மாய்களுக்கு நீர்வரத்து இல்லை.

இவை 58 கிராம கால்வாய் திட்டத்தில் பாசனம் பெறுபவை. வைகை அணையிலும் 60 அடிக்கு குறைவாகவே நீர் உள்ளதால் இக்கால்வாயில் நீர் திறக்கவில்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X