கமுதி, : கமுதியில் பனைஓலை பொருட்கள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்து விட்டதால் பல வருடங்களாகவே பனைஓலை தொழில் நலிவடைந்து வருகிறது.கமுதி ஆதி திராவிடர் தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பனை ஓலை தொழில் செய்து வந்தனர்.
இங்கு பனை ஓலை, மட்டையில் தயாரிக்கப்படும் பெட்டி, பாய், கருப்பட்டி கொட்டான் உட்பட ஏராளமான பொருட்கள் தயாரித்து விற்பனை செய்கின்றனர்.இதுகுறித்து தொழிலாளி சுந்தர்ராஜ் கூறியதாவது:கமுதியில் பல ஆண்டுகளாக பனைஓலை தொழில் செய்து வருகின்றோம். தற்போது ஏராளமான இடங்களில் பனைமரங்கள் அழிக்கப்பட்டதால் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்40 கி.மீ தொலைவில் உள்ள சாயல்குடி அதனை சுற்றியுள்ள பகுதியில் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.மூலப்பொருட்கள் விலையும் அதிகரித்து உள்ளது.
கொரோனாவால் பொருட்கள் விற்பனை முழுவதும் குறைந்து உள்ளது. கமுதியில் 30 வருடங்களுக்கு முன் பனைஓலை பொருட்களை அரசின் நேரடி கொள்முதல் நிலையம் இயங்கி வந்தபோது தொழிலில் நல்ல லாபம் கிடைத்து வந்தது.தற்போது கொள்முதல் நிலையம் இயங்கவில்லை.இதனால் முதுகுளத்துார், பரமக்குடி, அபிராமம் பகுதியில் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. கமுதியில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மட்டும் பனை ஓலை தொழில் செய்து வருகின்றனர்.ஏராளமானோர் மாற்றுத்தொழிலான கூலி வேலைக்கு செல்கின்றனர். அழிந்து வரும் பனை ஓலை தொழிலை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE