சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயில்வே மேம்பால பணி: கட்டடங்கள் கட்ட தடை

Added : டிச 07, 2020
Share
Advertisement
திருமங்கலம் : திருமங்கலம் விமான நிலையம் ரோட்டில் ரயில்வே மேம்பால பணி துவங்கவுள்ள நிலையில் கட்டடங்கள் கட்ட அனுமதி கூடாது என நெடுஞ்சாலைத்துறை நகராட்சி நிர்வாகத்தை கேட்டு கொண்டுள்ளது. இந்த ரோட்டில் ரயில்வே ஸ்டேஷன் அருகில் கிராசிங் உள்ளது.தினமும் சரக்கு மற்றும் பயணிகள் ரயில்கள் உட்பட 80 ரயில்கள் இவ்வழியாக செல்கின்றன. தினமும் 8 முதல் 10 மணி நேரம் வரை இங்குள்ள கேட்

திருமங்கலம் : திருமங்கலம் விமான நிலையம் ரோட்டில் ரயில்வே மேம்பால பணி துவங்கவுள்ள நிலையில் கட்டடங்கள் கட்ட அனுமதி கூடாது என நெடுஞ்சாலைத்துறை நகராட்சி நிர்வாகத்தை கேட்டு கொண்டுள்ளது.

இந்த ரோட்டில் ரயில்வே ஸ்டேஷன் அருகில் கிராசிங் உள்ளது.தினமும் சரக்கு மற்றும் பயணிகள் ரயில்கள் உட்பட 80 ரயில்கள் இவ்வழியாக செல்கின்றன. தினமும் 8 முதல் 10 மணி நேரம் வரை இங்குள்ள கேட் அடைக்கப்படும்.இப்பகுதியிலுள்ள 10 ஆயிரம் வீடுகளைச் சேர்ந்தவர்கள், விடத்தகுளம், விருசங்குளம் உட்பட 20 கிராம மக்கள் கேட் அடிக்கடி மூடப்படுவதால்அவதிக்குள்ளாயினர். இங்கு மேம்பாலம் கட்டவும் வலியுறுத்தினர்.அமைச்சர் உதயகுமார்முயற்சியால் பாலம் கட்ட திட்ட தயாரிப்பு நடக்கிறது.

இந்நிலையில் நகராட்சி 6 மற்றும் 7வது வார்டுகளில் கட்டடங்கள் கட்ட, வீட்டுமனைகள் விற்க அனுமதிக்க வேண்டாம் என நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கண்ணன் நகராட்சி நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார். கட்டடங்கள் கட்ட தடை விதிக்கப்படவுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X